யூடியூபர் இர்ஃபானுக்கு இத்தனை கோடி சொத்து மதிப்பா?.. அடேங்கப்பா செம கெத்தா இருக்காரே
சென்னை: தமிழ்நாட்டில் யூட்யூப் சேனல்கள் பெருகிவிட்டன. அதன் மூலம் பிரபலமடைந்தவர்களும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இர்ஃபான்.விதவிதமான உணவுகளை சாப்பிட்டு வீடியோக்கள் வெளியிட்டு ஃபேமஸ் ஆன அவர்; காலப்போக்கில் செலிபிரிட்டிகளை பேட்டி எடுக்க ஆரம்பித்தார். பிறகு செலிபிரிட்டியாகவே மாறினார். இதன் காரணமாக அவரை சுற்றி சர்ச்சைகளும் உருவாக தொடங்கின. இந்தச் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒருவரிடம் யூட்யூப் சேனலும்; அதனை மக்களிடம் ரீச் செய்யக்கூடிய திறமையும் இருந்தால் போதும் அவர் பிரபலம் ஆகிவிடலாம். அப்படி பிரபலமானவர்கள் தமிழ்நாட்டில் ஏராளமானோர் இருக்கிறார்கள். முன்பெல்லாம் சினிமாவுக்குள் நுழைய சின்னத்திரை வெகுவாக கை கொடுத்தது. இப்போதோ யூட்யூப் சேனல்கள் பெரும்பாலும் கைகொடுக்கின்றன. அதனை வைத்து சினிமாவுக்குள் வந்து பிரபலமடைந்தவர்கள், சினிமாவுக்குள் வராமலேயே பிரபலமடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

யூடியூபர் இர்ஃபான்: அப்படி சினிமாவுக்குள் வராமலேயே பிரபலமடைந்தவர்களில் ஒருவர்தான் இர்ஃபான். விதவிதமாக சாப்பிட்டு வீடியோக்களை முதலில் அவர் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றினார். அவர் சாப்பிடாத உணவுகளே இல்லை என்ற அளவுக்கு அவர் அவ்வளவு உணவுகளை சாப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் அவருக்கான சப்ஸ்க்ரைபர்கள் மில்லியன் கணக்கில் எகிறியது. இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு முழுவதும் ரொம்பவே பிரபலமடைந்தார்.
செலிபிரிட்டிகளுடன் பேட்டி: வீடியோக்கள் பதிவிட்டு செலிபிரிட்டியாக மாறிய அவர் ஒருகட்டத்தில் செலிபிரிட்டிகளை பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியிலும் உணவு பிரதானமானதாக இருந்தது. அப்படி அவர் பதிவிட்ட வீடியோக்களும் எக்குத்தப்பாக ஹிட்டடிக்க; போகப்போக இர்ஃபானும் செலிபிரிட்டியாக மாறினார். மேலும் அமெரிக்காவுக்கு சென்று நெப்போலியன் வீட்டில் ஹோம் டூர் வீடியோ போட்டார். அதுவும் சூப்பர் ஹிட்டடித்தது. சமீபத்தில் நடந்த நெப்போலியனின் மகன் திருமணத்துக்குக்கூட சென்றுவந்தார் இர்ஃபான்.
சர்ச்சைகள்: ஒருவர் அபரிமிதமாக வளர்ந்தால் அவருடன் சேர்ந்து சர்ச்சையும் வளர்வது இயல்பான ஒன்றே. அப்படித்தான் இர்ஃபானை சுற்றியும் சர்ச்சை எழுந்தது. அண்மையில் அவரது கார் ஒன்று ஏற்படுத்திய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். ஆனால் காரை தான் ஓட்டவில்லை என்று விளக்கமளித்தார். அதேபோல் தனது மனைவியின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்டது; பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொண்டது என தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார். ஆனால் பெரிதாக தண்டிக்கப்படவில்லை.
சொத்து மதிப்பு: அதற்கு காரணம் இர்ஃபான் தனது வீடியோக்கள் மூலம் சம்பாதித்த அரசியல் ஆளுமைகளின் சப்போர்ட்தான் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் யூட்யூபர் இர்ஃபானின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தினமும் வீடியோ பதிவிடும் அவர் ஒரு லட்சம் ரூபாய்வரை சம்பாதிக்கிறார் என்றும்; அவரது மொத்த சொத்து மதிப்பு 3லிருந்து ஐந்து கோடி ரூபாய்வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமும் பங்கேற்று அவர் நன்றாகவே சம்பாதித்தார் என்றும்; சென்னையில் அவருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு இருப்பதாகவும்; மூன்று சொகுசு கார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











