Dhruva Natchathiram - பணத்தை ரெடி செய்த கௌதம் மேனன்.. துருவ நட்சத்திரம் சிக்கல் தீர்ந்தது?.. விரைவில் ரிலீஸ்

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு விக்ரமை வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். சூர்யாவிடம் முதலில் சென்ற இந்த கதை அதன் பிறகு விக்ரமிடம் வந்தது. படத்தின் ஷூட்டிங் முடிந்தாலும் பண பிரச்னையால் ரிலீஸாகாமல் இருந்தது. ஒருவழியாக கடந்த நவம்பர் மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் ரிலீஸாகவில்லை. இந்த சூழலில் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய ரிலீஸ் அப்டேட் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன் அடுத்தடுத்து இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா படங்களின் மூலம் பெரும் கவனம் ஈர்த்தார். போலீஸ் ஸ்டோரி மற்றும் லவ் ஸ்டோரி ஆகிய ஜானர்களில் தனது தனித்துவமான மேக்கிங்கால் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார்.

Here are the Full details about Dhruva Natchathiram Movie Controversy

துருவ நட்சத்திரம்: சூழல் இப்படி இருக்க துருவ நட்சத்திரம் என்ற கதையை முதலில் சூர்யா மற்றும் ரஜினியிடம் கௌதம் சொல்ல இருவராலும் நடிக்க முடியவில்லை. அதனையடுத்து இந்தப் படத்தில் விக்ரம் கமிட்டானார். படம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ரிது வர்மா, விநாயகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

படத்துக்கு பிரச்னை: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து முடிக்கப்பட்டாலும் ஃபைனான்ஸ் பிரச்னைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதன் காரணமாக விக்ரமும், கௌதம் மேனனும் தங்களது அடுத்தடுத்த படங்களின் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டனர். கௌதம் மேனன் நடிப்பிலும் தீவிரமாக கவனம் செலுத்துகிறார். தனக்கு ஏற்பட்ட கடனை அடைக்கவே அவர் பல படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் லியோ படத்தில் நடித்திருந்தார். இடையில் சிம்புவை வைத்து அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு படமும் வரவேற்பையே பெற்றது.

தொடங்கிய வேலைகள்: இந்த சூழலில் துருவ நட்சத்திரம் படம் மீண்டும் தூசு தட்டப்பட்டு ரிலீஸ் செய்வதற்கான வேலைகளை மும்முரமாக செய்தனர். அதன்படி படமானது கடந்த வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் படத்தை பார்க்க மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கி தருவதாக சொல்லி ஏற்கனவே 2 கோடி ரூபாயை கௌதம் மேனன் வாங்கியிருந்தார். படமும் இயக்கவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த நிறுவனத்துக்கு கௌதம் மேனன் 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதனால் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் தள்ளிப்போனது.

வழக்கு விசாரணை: ஆல் இன் பிக்சர்ஸ் தொடர்ந்திருந்த வழக்கு மீதான விசாரணை கடந்த மாதம் நடந்தது. அப்போது கௌதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரி மாதத்தில் வெளியிடும் திட்டம் இருக்கிறது என கூறியிருந்தார். எனவே கண்டிப்பாக பண பிரச்னை விரைவில் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிப்ரவரியில் ரிலீஸ்?: இந்நிலையில் கௌதம் மேனன் பணத்தை ரெடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது துருவ நட்சத்திரம் படத்துக்காக 20 கோடி ரூபாய்வரை கடன் இருக்கிறதாம். தற்போது இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை 40 கோடி ரூபாய்வரை சென்றிருப்பதால் கடன் அடைக்க வேண்டிய பணத்தை விட அதிகமாகவே பணம் ரெடியாகிவிட்டது. எனவே விரைவில் செட்டில்மெண்ட் முடிந்து படம் ரிலிஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X