70th National Film Awards - 70ஆவது தேசிய விருதுகள்.. முழு லிஸ்ட் தெரியுமா?

சென்னை: 70ஆவது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 2022ஆம் ஆண்டு வெளியான படங்கள் இதில் போட்டியிட்டன. சிறந்த நடிகையாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல் சிறந்த நடன அமைப்பாளராக அந்தப் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதோ பெண்ணே பாடலுக்காக ஜானி மாஸ்டரும், சதீஷ் கிருஷ்ணனும் பெற்றிருக்கிறார்கள். இதுதவிர்த்து தேசிய விருதுகளின் முழு லிஸ்ட்டை பார்க்கலாம்.

இந்திய திரைத்துறையில் அனைவருமே பெற விரும்பும் விருது தேசிய விருது. அந்த விருதை பெற்றால் தேசிய அளவில் அடையாளமும் அங்கீகாரமும் கிடைக்கும். இதற்காக பல படைப்பாளிகள் கடுமையாக உழைத்து படங்களை கொடுப்பது வழக்கம். இந்தச் சூழலில் 2022ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்த விருது பட்டியலில் மொத்தம் 32 மொழிகளிலிருந்து 309 ஃபியூச்சர் பிலிம்ஸ் நாமினேட் ஆகின. அதேபோல் நான் ஃபியூச்சர் பிலிம்ஸில் 17 மொழிகளிலிருந்து 130 படங்கள் நாமினேட் ஆகியிருந்தன.

70th National Film Awards Nithya Menen AR Rahman

தமிழுக்கு கிடைத்த விருதுகள்: தமிழைப் பொறுத்தவரை மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படத்துக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன. அதாவது நித்யா மேனன் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றிருக்கிறார். அதேபோல் அந்தப் படத்தில் சிறந்த நடன அமைப்பாளருகான தேசிய விருதை ஜானி மாஸ்டரும், சதீஷ் மாஸ்டரும் பெற்றிருக்கிறார்கள். இதுதவிர்த்து பொன்னியின் செல்வன், (சிறந்த தமிழ் படம்), ரவி வர்மன் (சிறந்த ஒளிப்பதிவாளர்), ஆனந்த கிருஷ்ணமூர்த்தி (சிறந்த சவுண்ட் டிசைன்), ஏ.ஆர்.ரஹ்மான் (சிறந்த பின்னணி இசை) என மொத்தம் நான்கு விருதுகளை அள்ளியிருக்கிறது.

சிறந்த இயக்கம்: சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதினை உன்சாய் படத்துக்காக சூரஜ் ஆர். பர்ஜத்யா பெற்றிருக்கிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், அனுபம் கெர், பரினிதி சோப்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அதேபோல் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருதினை மலையாளத்தில் வெளிவந்த ஆட்டம் படத்துக்காக ஆனந்த் எகார்ஷி பெற்றிருக்கிறார். மேலும் சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதை அர்பிதா முகர்ஜியும், ராகுல் வி சிட்டெல்லாவும் குல்மொஹர் படத்துக்காக பெற்றிருக்கிறார்கள். குல்மொஹர் படம் ஹிந்தியில் சிறந்த ஃபியூச்சர் பிலிமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

தென்னிந்திய மொழிகளுக்கு விருதுகள்: சிறந்த நடிகர் என்ற கேட்டகிரியில் காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி பெற்றிருக்கிறார். அந்தப் படத்தை மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா உள்ளிட்டோர் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்வரை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கன்னட மொழியின் சிறந்த ஃபியூச்சர் பிலிமாக கேஜிஎஃப் 2வும், சிறந்த பொழுதுபோக்கு படமாக காந்தாரா படமும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல் சவுதி வெள்ளக்கா படம் சிறந்த மலையாள படமாகவும், கார்த்திகேயா 2, சந்து மொன்டெட்டி படங்கள் சிறந்த தெலுங்கு படமாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

பாடல்களுக்கான விருதுகள்: சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பிரம்மஸ்திரா 1 படத்துக்காக ப்ரிதாம் பெற்றிருக்கிறார். சிறந்த பின்னணி பாடகிக்கான விருதினை சௌதி வெள்ளக்கா படத்தில் இடம்பெற்றிருக்கும் சாயும் வெயில் பாடலுக்காக பாம்பே ஜெயஸ்ரீ பெற்றிருக்கிறார். சிறந்த பின்னணி பாடகருக்கான விருதினை பிரம்மஸ்திரா 1 படத்தில் இடம்பெற்ற கேசாரியா பாடலுக்காக அரிஜித் சிங் பெற்றிருக்கிறார். மேலும் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை ஃபௌஜா படத்தில் இடம்பெற்ற நௌஷர்த் சதார் பெற்றிருக்கிறார்.

பிற விருதுகள்: இவைத் தவிர்த்து ஆட்டம் படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதினை மகேஷ் புவானந்த் (ஆட்டம்), ஸ்பெஷல் ஜூரி விருதை மனோஜ் பாஜ்பாய் (குல்மொஹர், சஞ்சோய் சௌதரி படங்களுக்காக) பெற்றிருக்கிறார்கள். அதேபோல் குட்ச் எக்ஸ்பிரெஸ் படத்துக்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதினை நிக்கி ஜோஷியும், அபாரிஜிதோ படத்துக்காக சிறந்த ஒப்பனை கலைஞர் விருதை சோம்நாத் குண்டுவும், சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருதினை கேஜிஎஃப் 2 படத்துக்காக அன்பறிவ் மாஸ்டர்ஸும், சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டருக்கான விருதினை ஃபௌஜா படத்துக்காக பவன் ராஜ் மல்ஹோத்ராவும், சிறந்த துணை நடிகைக்கான விருதினை உன்சாய் படத்துக்காக நீனாவும் பெற்றிருக்கிறார்கள். நான் ஃபியூச்சர் பிலிம் கேட்டகிரியை பொறுத்தவரை ஆயனா படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதனை சிதாந்த் சரின் இயக்கியிருந்தார். அதேபோல் சிறந்த ஆவண படமாக முர்முருஸ் படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் சிறந்த குழந்தை நட்சத்திரமாக மல்லிகாபுரம் படத்தில் நடித்ததற்காக ஸ்ரீபத் பெற்றிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X