Kalki 2898 AD படம் எப்படி இருக்கு?.. தெறிக்கவிடும் ட்விட்டர் விமர்சனம்.. பாஸா ஃபெயிலா?
சென்னை: பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கல்கி 2898 ஏடி. இதில் பிரபாஸுடன் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்போடு படமானது இன்று வெளியாகியிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் படம் தேறியதா இல்லை தேறவில்லையா என்பது குறித்து பார்க்கலாம்.
பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக வளர்ந்த பிரபாஸுக்கு கடைசியாக வந்த சலார், ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்கள் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெற்று தரவில்லை. இதனால் பாகுபலி கொடுத்த வைபை அவர் தவறவிட்டுவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் நொந்துபோயிருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒரு பிரமாண்ட ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலும் பிரபாஸ் கடுமையாக உழைத்து வருகிறார்.

கல்கி 2898 ஏடி: சூழல் இப்படி இருக்க நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி என்ற படத்தில் இப்போது நடித்திருக்கிறார் பிரபாஸ். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இதில் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே வெற்றிக்காக காத்திருக்கும் பிரபாஸ்; கல்கி படத்தில் அதனை அறுவடை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
இன்று ரிலீஸ்: பான் இந்தியா படமாக இன்று கல்கி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சில மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தப் படத்துக்கு அவர்கள் சென்றிருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க படம் பார்த்தவர்கள் கல்கி படத்துக்கு தங்களது விமர்சனத்தை ட்விட்டரில் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ட்விட்டர் விமர்சனம்: படத்தை பார்த்த இந்த ரசிகர், 'கல்கி படத்தின் முதல் பாதி பேரழிவு..பிரபாஸின் காமெடி இரிட்டேட் செய்கிறது. இரண்டாவது பாதி சுமார்தான். அமிதாப் பச்சனும், தீபிகா படுகோனேவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஐந்துக்கு 2 மதிப்பெண்கள்தான் கொடுப்பேன்' என்று ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

கல்கி ப்ளாக் பஸ்டர்: படத்தை பார்த்த இவரோ, ' படம் பயங்கரமான ப்ளாக் பஸ்டர்.. இந்தப் படத்துக்காக பிரபாஸ் கடுமையாக உழைத்திருக்கிறார். நாக் அஸ்வினின் இயக்கம் சூப்பராக இருக்கிறது' என்று கூறி தனது பாசிட்டிவ் விமர்சனத்தை படத்துக்கு கொடுத்திருக்கிறார்.

அதேபோல் இந்த ரசிகரும், கல்கி சினிமாவில் மாஸ்டர் பீஸ் என்று புகழ்ந்திருக்கிறார்.

லண்டன்வாசி விமர்சனம்: லண்டனில் படம் பார்த்த இந்த ரசிகர், 'இப்போதுதான் லண்டனில் படம் பார்த்து முடித்தேன். கல்கி படம் ப்ளாக் பஸ்டர். விஷுவல்ஸும், கதை சொல்லிய விதமும் அருமையாக இருந்தன. இரண்டாவது பாதி சூப்பர். கடைசி 30 நிமிடங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்' என்று புகழ்ந்திருக்கிறார்.

நேரம்தான் வீண்: கல்கி படத்தை பார்த்த இந்த ரசிகர், 'கல்கி தோல்வி படம். பேரழிவு.. நேரத்தை வீணாக்கும் திரைப்படம் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், வசனங்கள் நன்றாக இல்லை, பிஜிஎம் மோசம், லீடு நடிகரிடம் மோசமான நடிப்பு என கிழித்திருக்கும் அவர், கிராஃபிக்ஸ் பணிகளுக்காக ஒரு ஸ்டார் கொடுப்பேன் என்று அடித்து துவைத்திருக்கிறார். மேலும் இன்னொரு ரசிகரோ பிரபாஸ் நடனமாடும் வீடியோவை பகிர்ந்து, இது க்ரிஞ்சுக்கான Sample என்று குறிப்பிட்டிருக்கிறார்.


கல்கி ஓகேதான்: படத்தை பார்த்த இந்த ரசிகர், 'கல்கி படம் ஓகேதான்.. அமிதாப் பச்சன் ராக்ஸ்..பிரபாஸிடம் நீட்டிக்கப்பட்ட கேமியோ கொடுக்கப்பட்டிருக்கிறது. கமல் ஹாசனும், பிஜிஎம்மும் சூப்பர். முதல் பாதி சராசரிதான். இரண்டாவது பாதி நீளமாக இருக்கிறது. படத்தின் முதல் பத்து நிமிடங்களும், இடைவேளை காட்சியும் சூப்பர். பார்ட் 2வுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் லீட் அருமையாக இருக்கிறது. உணர்வுப்பூர்வமாக எதுவுமே கனெக்ட் ஆகவில்லை. ஒருமுறை பார்க்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகமொத்தம் இதுவரை கல்கி படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துவருகின்றன. இன்றைய நாள் முடிவில் கல்கி படம் தப்பிக்குமா, இல்லை தடுக்கி விழுந்துவிடுமா என்பது தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











