இந்தியன் 2 படம் எப்படி இருக்கு?.. சேனாபதி தாத்தா கவர்ந்தாரா?.. படம் பார்த்தவர்கள் சொல்றது இதுதான்

சென்னை: சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த கமல் ஹாசனுக்கு விக்ரம் படம் கம்பேக்காக அமைந்தது. அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இந்தியன் 2 படத்திலும் நடிக்க ஆரம்பித்தார். இந்தியன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்று இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. எனவே அதன் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்போடு இன்று இந்தியன் 2 படம் ரிலீஸாகியிருக்கிறது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தவர். அந்தவகையில் அவர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் இந்தியன். கமல் ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஷங்கரின் கரியரில் மிக முக்கியமான படமாகவும் இந்தியன் அமைந்தது.

Indian 2 Kamal Haasan Shankar 2

கல்ட் க்ளாசிக்: அந்தப் படத்தின் மேக்கிங், கேமரா, இசை என அத்தனையும் பக்காவாக இருந்தன. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அந்தப் படத்தின் வெற்றிக்கு மேலும் பலம் கூட்டியது. அதேபோல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய வசனங்களும் படத்துக்கு பெரிதாக உதவின. குறிப்பாக, 'வெளிநாட்டில் கடமையை மீறுவதற்கு லஞ்சம்; இங்குதான் கடமையை செய்வதற்கே லஞ்சம்" என்ற வசனம் நெற்றிப்பொட்டில் அடித்தது போல் இருக்கும். இப்படி எல்லா ஏரியாவிலும் படம் பக்காவாக இருந்ததால் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது.

இந்தியன் 2: இந்தியன் படத்தின் க்ளைமேக்ஸில் அதற்கான இரண்டாம் பாக லீடோடு முடித்திருந்தார் ஷங்கர். இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாகம் பல வருடங்களாகவே ஆரம்பிக்கப்படவில்லை. ஒருவழியாக சில வருடங்களுக்கு முன்பு படத்தின் வேலைகள் ஆரம்பித்தபோது ஏற்பட்ட விபத்தால் உயிரிழப்புகள் ஏற்பட படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதனையடுத்து கமல் ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியால் மீண்டும் உற்சாகமாகி இந்தியன் 2 படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இன்று ரிலீஸ்: கமல் ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ஜெகன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதன்படி படம் பார்த்த ஒரு ரசிகர் கூறுகையில், " இந்தக் காலத்திற்கு தேவையான படமாக இருக்கிறது இந்தியன் 2. லஞ்சம் வாங்கக்கூடாது என்று முதல் பாகத்தில் காண்பித்தார்கள். இப்போது லஞ்சம் வாங்கினால் இந்த கால பசங்க ஏத்துக்கமாட்டாங்க என்பதை இதில் காண்பித்திருக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுக்கு மூன்றாவது பார்ட்டில்தான் நிறைய இருக்கிறது"" என்றார்.

குட்டி ரசிகை விமர்சனம்: அவரைத் தொடர்ந்து படம் பார்த்து 2K கிட் பெண் ஒருவர், 'நான் இந்தியன் படத்தின் முதல் பாகத்தை பார்த்திருக்கிறேன். அது ரொம்பவே பழைய படம். இந்தப் படம் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. கமல் ஹாசனின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லா சீன்களுமே புல்லரிக்க வைத்தன''என்றார். அவரைத் தொடர்ந்து இன்னொரு ரசிகர் கூறுகையில், 'இந்தியன் 2 படம் நன்றாக இருக்கிறது. ஆனால் முன்கூட்டியே கணிக்கும்படி இருக்கிறது. வர்ம கலையை நன்றாக யூஸ் செய்திருக்கிறார்கள். படத்தின் தரத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்தியிருக்கலாம். வீரசேகரன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் எஸ்.ஜே.சூர்யா நன்றாக நடித்திருக்கிறார்''என்றார்.

அவசியமான படம்: படத்தை பார்த்த இரண்டு ரசிகைகள், படம் நன்றாக இருக்கிறது. கமல் ஹாசனுக்காக பார்க்கலாம் என்றார்கள். அவர்களைத் தொடர்ந்து பேசிய ரசிகர் ஒருவர், 'இந்தியன் 1 படத்துக்கும் இந்தியன் 2 படத்துக்கும் நன்றாக கனெக்ட் செய்திருக்கிறார்கள். இப்போது உள்ள தலைமுறையில் எப்படி ஊழல் நடக்கிறது என்பதை காண்பித்திருக்கிறார்கள். படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையை பயன்படுத்திருக்கிறார்கள். அனிருத் நன்றாகத்தான் இசையமைத்திருக்கிறார். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு லெஜெண்ட். கமலின் நடிப்பு பிரமிப்பாக இருக்கிறது. அவர் உலக நாயகன்தான்"" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X