அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா.. கலந்து கொள்ளாத பிரபலங்கள்.. பின்னணி என்ன?
சென்னை: அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட 5 வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருவறையில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு கோயில் அர்ச்சகர் வழிகாட்டுதலின் படி பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் மோடி செய்தார். இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
வண்ண வண்ண மலர்களாலும், கண்களைப் பறிக்கும் விலை உயர்ந்த நகைகளாலும் குழந்தை ராமர் சிரித்த முகத்துடன் தெய்வீகமாக பார்வையில் காட்சி அளித்தார். நேற்றைய தினம் கோவில் கும்பாபிஷேகம் முடிந்தாலும் கூட பொதுமக்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் மட்டுமே தரிசனம் செய்தனர்.

ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், ரஜினிகாந்த், தனுஷ்,சச்சின் டெண்டுல்கர், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண் கங்கனா ரனாவத், பிடி உஷா, ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் பிரசாத், அனில் கும்ப்ளே, மிதாலி ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் அழைப்பிதழ் வழங்கப்பட்டும் கலந்து கொள்ளாத பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
கலந்து கொள்ளவில்லை: அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலிக்கு ராமர் கோவில் கும்பாபிஷே விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும், இதில், விராட் கோலி மட்டுமே கலந்துகொண்டார். அனுஷ்கா கலந்துகொள்ளவில்லை இதனால், ரசிகர்கள் கவலை அடைந்தனர். மேலும், பல ஊடகங்கள் தம்பதியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன.

பட ப்ரோமோஷனில் பிஸி: அதே போல மலையாள நடிகர் மோகன்லாலும் இதில் கலந்து கொள்ளவில்லை. அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான மலைக்கோட்டை வாலிபன் படத்தின் விளம்பரப் பணியில் அவர் பிஸியாக இருந்ததால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
அதே கருத்துத்தான்: பாலிவுட்டின் மற்றொரு சன்னி தியோல், அக்ஷய் குமார், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் இருந்து விவேக் ரஞ்சன் நேரடியாக அழைப்பிதழ் வழங்கியும் இவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதே தீபிகா படுகோனே, அமீர்கான், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களில் இதில் கலந்து கொள்ளவில்லை. ராமர் கோவில் திறப்பு விழா குறித்து பேசிய கமல், நான் 30 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி பேசிவிட்னே். அதே கருத்து தான். இப்போதும் அதில் எந்த மாற்றமுல் இல்லை' என்றார்.


Click it and Unblock the Notifications