ரஜினிகாந்த்தின் மகளுக்கு வந்த மற்றொரு சோதனை.. இருந்தாலும் இவ்வளவு ஆகாது.. ரசிகர்கள் வேதனை
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம். இதனால் ரஜினிகாந்த் உச்சக்கட்ட அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே லால் சலாம் படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. அந்தப் படத்தில் ரஜினியும் கெஸ்ட் ரோல் செய்திருந்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் சௌந்தர்யா ரஜினியை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கினார். மேலும் அவரது முதல் திருமணம் பாதியில் முடிந்தது. இதனையடுத்து விசாகன் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அதேபோல் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

மூத்த மகளுக்கும் டைவர்ஸ்: சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு முறிவில் நின்றது. அதனையடுத்து சமீபத்தில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார்கள். அவர்களது மனுவை விசாரித்த நீதிமன்றம்; இரண்டு பேரும் விவாகரத்துக்கு முழு ஒப்புதல் என்று சொன்ன காரணத்தின் அடிப்படையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. அது கோலிவுட்டில் பேசுபொருளானது.
ரஜினி அப்செட்: அதேசமயம் தனுஷையும் ஐஸ்வர்யாவையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று ரஜினிகாந்த் எவ்வளவோ முயன்றார். ஆனால் இருவரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் பிரிந்துவிட்டதால் அவர் உச்சக்கட்ட அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஐஸ்வர்யாவுக்கு அவர் இரண்டாவது திருமணம் செய்து வைப்பாரா மாட்டாரா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருக்கிறது. அதற்கு காலத்திடமும், ஐஸ்வர்யாவிடமும்தான் பதில் இருக்கிறது.
இயக்குநர் ஐஸ்வர்யா: இதற்கிடையே ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். அந்தப் படமும் தோல்விப் படமாக அமைந்தது. சூழல் இப்படி இருக்க கடைசியாக அவரது இயக்கத்தில் லால் சலாம் படம் வெளியானது. அதில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க; ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தில் பிரச்னை: பெரும் எதிர்பார்ப்புடன் அந்தப் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. தோல்வி மட்டுமின்றி அந்தத் தோல்விக்கு ஐஸ்வர்யா சொன்ன காரணம் ட்ரோலுக்கு உள்ளானது. அதாவது படத்தின் ஹார்ட் டிஸ்க்கை காணவில்லை. எனவே சில முக்கியமான காட்சிகளை படத்தில் வைக்க முடியவில்லை என்று சொல்லியிருந்தார். சூழல் இப்படி இருக்க படத்தின் ஓடிடி ரிலீஸும் தள்ளிப்போனது. இதனால் ஐஸ்வர்யா சோகத்துக்கு சென்றதாக கூறப்பட்டது.
அடுத்த சோதனை: இந்நிலையில் லால் சலாம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இப்படியே ஓடிடியில் ரிலீஸ் செய்தால் படத்துக்கு வேல்யூ இருக்காது என்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளம் படத்தை வெளியிடுவதில் தாமதம் காட்டிவருவதாகவும்; எனவே டிசம்பர் 14ஆம் தேதி ஜீ சினிமா சேனலில் நேரடியாக படம் ரிலீஸாவதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஐஸ்வர்யாவுக்கு இது இன்னொரு சோதனைதான். ஓடிடியில்கூட தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











