இட்லி கடைக்கு வந்த சிக்கல்?.. அதிரடி மாற்றம் செய்தாரா தனுஷ்?.. ரசிகர்கள் ஆச்சரியம்
சென்னை: தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அவரது 50ஆவது படமான அதனை அவரே இயக்கி நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் தனுஷ்; அடுத்ததாக இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தனுஷ் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த சூழலில் ஒருகட்டத்துக்கு மேல் பாடல்கள் எழுதுவதிலும் தனது கவனத்தை திருப்பினார். அதனையடுத்து படம் இயக்கவும் செய்தார். அப்படி அவர் இயக்கிய முதல் படமான பவர் பாண்டி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தனுஷும் பிளாஷ்பேக் போர்ஷனில் நடித்திருந்தார். அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் அட நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் தனுஷ் கலக்குகிறாரே என்று ஆச்சரியப்பட்டனர்.

தனுஷின் 50 ராயன்: அதனையடுத்து தனது 50ஆவது படமான ராயனை அவரே இயக்கி நடித்திருந்தார். இதில் அவருடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது சுமாரான வரவேற்பையே கொடுத்தனர். தனுஷின் நடிப்பு அசுரத்தனமாக இருந்தாலும்; படத்தின் மேக்கிங் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன பிரச்னை?: படத்தின் கதையும், திரைக்கதையும் அரத பழசாகவே இருந்தது. உடன் பிறந்தவர்கள் மீது அண்ணன் காட்டும் பாசமும், அவருக்கு உடன் பிறந்தவர்கள் செய்யும் துரோகமும் என ஆறிலிருந்து அறுபதுவரை கால கதையை பட்டி டிங்கரிங் செய்து; அதில் கொஞ்சம் வடசென்னை உள்ளிட்ட படங்களின் மசாலாக்களை சேர்த்து தனுஷ் கிண்டி கொடுத்தார் என்று பலரும் ட்ரோல் மெட்டீரியலாக அதனை மாற்றினர். இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: தனுஷ் இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அனிகா, மாத்யூ தாமஸ், தனுஷின் உறவினர் பையன் என பலர் நடித்திருக்கிறார்கள். படத்திலிருந்து வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி சக்கைப்போடு போட்டிருக்கிறது. படமும் அதே டோனில் வந்து ஹிட்டடிக்குமா இல்லை ராயன் போல் வாரிவிடுமா என்ற அச்சத்துடன் தான் தனுஷ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
இட்லி கடை: சூழல் இப்படி இருக்க தனுஷ் இன்னொரு படத்தையும் இயக்கி நடிக்கிறார். படத்துக்கு இட்லி கடை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது. படத்தின் ஷூட்டிங்கும் தேனியில் தொடங்கியிருக்கிறதாம். இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி முதலில் ஒரு ரோலில் அசோக் செல்வன் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அவர் விலகிவிட்டார். அதனையடுத்து அந்த ரோலுக்கு சில நடிகர்களிடம் பேசிய தனுஷ்; யாருமே ஒத்துக்கொள்ளாததால் அந்த ரோலையே தூக்கிவிட்டு கதையில் அதிரடியாக சில மாற்றங்களை செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











