பேபி ஜான் நஷ்டம் கொடுத்தால் என்ன?.. அட்லீயின் அடுத்த மூவ்.. சமந்தாவை ஃபாலோ செய்கிறார் போல

மும்பை: தமிழில் இயக்குநராக அறிமுகமான அட்லீ ஹிந்தியில் ஜவான் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட்டானதைத் தொடர்ந்து பட தயாரிப்பிலும் இறங்கினார். அந்தவகையில் அவர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை வைத்து பேபி ஜான் என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படம் தமிழில் வெளியாகி ஹிட்டான தெறி படத்தின் ரீமேக். ஆனால் ஹிந்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் அட்லீக்கு பலத்த நஷ்டத்தை கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் அட்லீ. அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அடுத்ததாக அவர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை தொடர்ந்து இயக்கினார். அந்த மூன்று படங்களில் பிகில் படத்தை தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் மெகா ஹிட்டாகின. அதிலும் மெர்சல் படம் விஜய்யின் கரியரில் வசூல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ஒன்றாக இருக்கிறது.

atlee baby john

ஹிந்தியில் அறிமுகம்: விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கிய அட்லீ அடுத்ததாக தமிழில்தான் பயணப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் ஜவான் படத்தை இயக்கினார். அந்தப் படம் தமிழ்நாட்டில் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் பாலிவுட்டில் சக்கை போடு போட்டது. மேலும் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. தமிழிலிருந்து சென்று ஹிந்தியில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எடுத்த முதல் இயக்குநர் என்ற பெருமையை அட்லீ ஜவானில் பெற்றார்.

அடுத்த படம்: ஜவான் படத்துக்கு பிறகு அட்லீயின் மீதான கவனம் பாலிவுட்டில் பெருகியிருக்கிறது. அநேகமாக அடுத்ததும் ஷாருக்கானை வைத்து அவர் படம் இயக்குவார் என்றும்; அதனை முடித்து சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட்டிலேயே அவரது முழு கவனமும் இப்போது இருப்பதால் மும்பையிலேயே ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கி தனது மனைவி ப்ரியாவுடன் செட்டிலாகிவிட்டார் அவர். இதற்கிடையே பேபி ஜான் படத்தையும் தயாரித்தார்.

படு ப்ளாப்: பேபி ஜான் திரைப்படம் தமிழில் வெளியாகி மெகா ஹிட்டான தெறி படத்தின் ரீமேக்காகும். இதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டதாகவும்; ஆனால் 50 கோடி ரூபாய்கூட வசூலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அட்லீக்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.

அடுத்த மூவ்: இந்நிலையில் அட்லீ குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி பேபி ஜான் பலத்த அடி கொடுத்தாலும் அடுத்த விஷயத்தில் தனது முதலீடை செய்திருக்கிறாராம் அட்லீ. அதாவது பிக்கிள் பால் என்ற விளையாட்டு ஃபேமஸாகிவருகிறது. அந்த பிக்கிள் பால் லீக் தொடர் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. இந்த லீக் தொடரில் நடிகை சமந்தா ஒரு அணியை வாங்கியிருக்கிறார். அதேபோல் அட்லீயும் பெங்களூரு அணியை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சமந்தாவை அட்லீ ஃபாலோ செய்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X