GOAT ரிலீஸ் எப்போ தெரியுமா?.. செம ஸ்கெட்ச் போட்டிருக்கும் படக்குழு.. வெங்கட் பிரபு சரியான விவரம்தான்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். அதற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் முழு கவனம் செலுத்தவிருக்கும் அவர் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. அநேகமாக இன்னும் ஒரு ஷெட்யூலுடன் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்று கடந்த சில வருடங்களாகவே பலமாக பேச்சு ஓடிகொண்டிருந்தது. எந்த அலப்பறையும் போடாமல் அரசியல் கட்சி ஆரம்பித்த விஷயத்தை சிம்ப்பிளாக ட்விட்டரில் அறிவித்துவிட்டார் விஜய். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்றும் கூறிவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் சோகமடைந்திருக்கின்றனர்.

GOAT: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், யோகிபாபு, பிரேம்ஜி, சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இப்போதே நிலவிவருகிறது.
மும்முரமடைந்த ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. வெங்கட் பிரபு எப்போதும் வித்தியாசமான முறையில் மேக்கிங் செய்வார் என்பதால் இதில் எந்த மாதிரியான மேக்கிங்கை கையாண்டிருக்கிறார் என்பதை பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள் ரசிகர்கள். அஜித்துக்கு எப்படி மங்காத்தா படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தாரோ அதேபோல் GOAT படத்தையும் மெகா ஹிட்டாக கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
க்ளைமேக்ஸ் ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எப்போதும் பக்காவாக பிளான் போட்டு வேலை செய்யும் வெங்கட் பிரபு; இதில் கூடுதல் வேகம் காட்டியிருக்கிறார். இதனால் விஜய்யே இம்ப்ரெஸ் ஆகிவிட்டதாகவும் ஒரு தகவல் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கை இலங்கையில் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் சூழலில் இலங்கைக்கு சென்றால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று விஜய் இலங்கையில் ஷூட்ட்ங் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
கேரளாவில் விஜய்: இதனையடுத்து கேரளாவில் க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கை நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டு ஷூட்டிங்கை நடத்தினார். கேரளாவுக்கு விஜய் சென்றபோது; தமிழ்நாட்டில் எப்படி விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதேபோல் கேரளாவிலும் இருக்கிறது என்பது நிரூபனமானது. ஏனெனில் ஷூட்டிங்கிற்காக 14 வருடங்கள் கழித்து கேரளாவுக்கு விஜய் வருவதை அறிந்துகொண்ட ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடினர். கேரள ஹீரோக்களுக்குக்கூட இல்லாத மாஸ் வரவேற்பு விஜய்க்கு கிடைத்தது.
எப்போது ரிலீஸ்?: இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட 15ஆம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸாகவிருக்கிறது. எனவே அந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு GOAT படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று வெங்கட் பிரபுவும், படக்குழுவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











