GOAT அப்டேட்.. விஜய்க்கு தங்கையாக நடிக்கப்போகும் நடிகை இவரா?.. செம விஷயமா இருக்கே

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததாக கூறப்பட்டாலும் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

Here are the New Details about GOAT Movie Update

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time)என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.

விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

டைம் ட்ராவல்: இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகிறது என்றும் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோ கமாண்டோ ட்ரெஸ்களில் கையில் துப்பாக்கியுடன் வந்ததை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இதில் விஜய் கமாண்டோவாக நடிக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். அதுமட்டுமின்றி, தந்தை விஜய்க்கு நடக்கும் துரோகத்தை மகன் விஜய் டைம் ட்ராவல் செய்து முறியடிப்பதுதான் ஒன்லைன் என்றும் சொல்லப்படுகிறது.

தங்கை கதாபாத்திரம்: இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது படத்தில் விஜய்க்கு ஒரு தங்கை கேரக்டரை வெங்கட் பிரபு உருவாக்கியிருப்பதாகவும்; அதற்கு நடிகை அபியுக்தாவை ஃபிக்ஸ் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அபியுக்தா ஒரு மாடல் ஆவார். சில விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். முன்னதாக அந்தக் கேரக்டருக்கு லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான இவானாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும்; அதற்கு அவரோ தற்போது ஹீரோயினாக கிராஃப் நன்றாக இருக்கும்போது தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து மறுத்துவிட்டதாகவும் பேச்சு ஓடியது குறிப்பிடத்தக்கது.

நெகட்டிவ் ரோல்: அதேபோல் இப்படத்தில் விஜய்க்கு நெகட்டிவ் ஷேட் கலந்த கதாபாத்திரம்தான் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா படத்தில் அவருக்கு வெங்கட் பிரபு நெகட்டி ரோலைத்தான் கொடுத்திருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதன் காரணமாக GOAT படமும் மெகா ஹிட்டாகும் என்று தளபதி ரசிகர்கள் உறுதியாக கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X