இளையராஜா பயோபிக்.. தனுஷ் கொடுத்த ஐடியா?.. ஓகே சொன்ன இசைஞானி?
சென்னை: இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக உலகம் எங்கும் வாழும் மனிதர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த பயோபிக் மூலம் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பாடல்களை கேட்ட பலரும் அட இது நம்ம ஊர் இசை மாதிரி இருக்கே என்று சிலாகிக்க ஆரம்பித்தனர். இளையராஜாவின் இசை இன்று உலகம் முழுக்க பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது இசை பயணம் முதலில் ஆரம்பித்தது கம்யூனிஸ்ட் மேடைகளில். தனது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசை குழுவை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் வாசிப்பாளராக இருந்தவர் இளையராஜா.

பெரும் போராட்டம்: சினிமாவுக்குள் நுழைந்து முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தாலும் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர் இளையராஜா. குறிப்பாக யாருக்கும் நடக்கக்கூடாத தாக்குதல் எல்லாம் இளையராஜாவுக்கு நடந்தது. ஏன் இன்னமும் ஒரு சிலர் அவர் மீது அந்தத் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சர்ச்சைகள்: இளையராஜா எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சியில் இருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும் சந்தித்தவர். பிரதமர் மோடி குறித்து அவர் கூறிய கருத்து, ராஜ்யசபா எம்.பி ஆனது என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். அதேபோல் சில இயக்குநர்கள், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோருடனும் கருத்து வேறுபாடு எழுந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
பயோபிக்: அவரது இசையமைப்பில் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. படத்தை மெர்குரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதில் இளையராஜாவாக சிறந்த நடிகர் தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார்.
தனுஷ் கொடுத்த ஐடியா: இந்தப் படத்தில் இளையராஜாவின் புகழ்ச்சி மட்டும் பாடப்படுமா இல்லை அவர் குறித்த சர்ச்சைகளும் படத்தில் இடம்பெறுமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில் இளையராஜா பயோபிக் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கலாம் என்று தனுஷ் ஐடியா கொடுத்ததாகவும்; அதற்கு இளையராஜாவும் ஒத்துக்கொண்டார் என்றும் இப்போது சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











