கமலுக்காக காசை வாரி இறைக்கும் லைகா?.. என்னது மீண்டும் இந்தியன் 2 ஷூட்டிங்கா?.. என்னதான் நடக்குது
சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருப்பதாக கூறப்பட்ட சூழலில் அப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். சுதந்திர போராட்டத்தையும், லஞ்சத்திற்கு எதிரான போராட்டத்தையும் மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தியன் மெகா ப்ளாக் ப்ஸ்டர் ஆனது. இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இறங்கியது.

இந்தியன் 2வில் விபத்து: ஷூட்டிங் நிறுத்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கடந்த 2019ஆம் ஆண்டு ஷூட்டிங்கும் தொடங்கிய சூழலில் சில பிரச்னைகளின் காரணமாக ஷூட்டிங் தடைப்பட்டது. அதன் பின் மீண்டும் 2020ஆம் ஆண்டு முழுவீச்சில் ஷுட்டிங் தொடங்கியது. ஆனால் 2020ஆம் ஆண்டு தொடங்கி பரபரப்பாக நடந்துவந்த ஷூட்டிங்கில் கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்திய சூழலில் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியன் 2 கிடப்பில் போடப்பட்டது.
களத்தில் குதித்த ரெட் ஜெயண்ட்: இதனால் இந்தியன் 2 படம் பெரும்பாலும் கைவிடப்பட்டுவிட்டது என்றே பலராலும் கருதப்பட்டது. கமல் ஹாசனும் விக்ரம் படத்தில் நடித்து மெகா ஹிட்டை கொடுத்துவிட்டார். இதனால் இந்தியன் 2 நிச்சயம் மீண்டும் தொடங்கப்படாது என்பது பலரின் பேச்சாக இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்தியன் 2 படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனமும் லைகாவுடன் இணைந்து தயாரிக்க முன் வந்தது.
டேக் ஆஃப் ஆன இந்தியன் 2: இதனையடுத்து இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து தைவான், தென் ஆப்பிரிக்கா, சென்னை, சூரத் என பல இடங்களில் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. அனிருத் இசையமைக்கிறார். தில் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
ட்ரெய்லர்: படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லருக்கு ரசிகர்களில் பலர் வரவேற்பு கொடுத்தாலும் சிலர் தங்களது விமர்சனத்தை முன்வைத்தனர். வழக்கமான ஷங்கர் படம் போல் இருக்கும் என்பதை ட்ரெய்லர் உறுதி செய்வதாக அவர்கள் ஓபனாகவே கூறினர்.
மீண்டும் ஷூட்டிங்: படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டதாகவும் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே இந்தியன் 2வுக்காக எடுத்த காட்சிகளை வைத்தே படத்தின் மூன்றாம் பாகத்தையும் உருவாக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சித்தார்த் மற்றூம் ப்ரியா பவானி சங்கர் இணைந்து ஆடும் ஒரு பாடல் காட்சியை சென்னை எண்ணூரில் ஷங்கர் படமாக்கிவருவதாகவும் அதற்காக லைகா நிறுவனம் ஐந்து லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஒரு குடியிருப்புப் பகுதியில் இருக்கும் சுவர்கள் முழுக்க இந்தியன் தாத்தா புகைப்படங்களை வரையும் பணியும் நடைபெற்றுவருவதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் போறபோக்கா பார்த்தா படம் சீக்கிரம் ரிலீஸ் ஆகாதோ என்று ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்திருக்கின்றனர். சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க பாஸ் என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











