என்னது கங்குவா படத்தின் கதை இதுவா?.. இந்தக் கதையும் அந்த மாதிரிதானா?.. என்ன சிவா சாரே?
சென்னை: சூர்யா நடிப்பில் கங்குவா படம் உருவாகியிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இப்படம் கோலிவுட்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றாக இருக்கிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படம் இன்னும் சில மாதங்களில் ரிலீஸாகவிருக்கும் நிலையில் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் கங்குவா படத்தின் கதை குறித்த புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.
சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. அதேசமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். திஷா பதானி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

பல மொழிகளில்: சூர்யாவின் கரியரிலேயே கங்குவா படம்தான் ஹை பட்ஜெட் படம். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படம் 3டி தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. எனவே இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பதற்காக அவரும் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிந்த ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் சென்னை, கோவா, தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது. சமீபத்தில்தான் சூர்யா படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை கொடுத்து முடித்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின. மேலும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும்; இரண்டு பாகங்களுக்கான ஷூட்டிங்கையும் சிவா முடித்துவிட்டார் என்றும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
வெளியான டீசர்: படத்தின் டீசர் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதன்படி வெளியிடப்பட்டது. டீசர் மிகச்சிறப்பாக வந்திருப்பதாக சூர்யா ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். மேலும் கிராஃபிக்ஸ் காட்சிகளும், சூர்யாவின் கெட்டப்பும் மெர்சல் செய்வதாகவும்; கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துவருகிறார்கள். அதேசமயம் மற்றொரு தரப்பினரோ எதிர்பார்த்த அளவு ஒன்றும் இல்லை என்று பேச்சை ஆரம்பித்திருக்கிறார்கள். படத்தின் ரிலீஸ் தேதி டீசரில் குறிப்பிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அந்தத் தேதியை படக்குழு அறிவிக்கவில்லை.
இதுதான் கதையா?: இந்நிலையில் கங்குவா படத்தின் கதை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருக்கிறதாம். 1700ஆம் நூற்றாண்டில் வாழும் சூர்யா டைம் ட்ராவல் செய்து 2023ஆம் ஆண்டுக்கு வருவது போன்றும்; அப்போது முடிக்க முடியாத சில காரியங்களை அவர் எப்படி முடிக்கிறார் என்று ஆக்ஷன் பேக்கேஜோடு சிவா சொல்லியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சமீபகாலமாக டைம் ட்ராவல் ஜானர் படங்கள் வருவது அதிகரித்திருக்கின்றன. சிவாவும் அதே ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











