என்னது தலைவர் 171 கதை அந்த ஜானரில் உருவாகிறதா?.. அதற்குள் இணையத்தில் தீயாக பரவும் விஷயம்

சென்னை: ரஜினிகாந்த் இப்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படத்துக்கு நிலவும் எதிர்பார்ப்பைப்போல் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கவிருக்கும் தலைவர் 171 படத்துக்கும் இருக்கிறது. ஏனெனில் கோலிவுட்டின் மோஸ்ட் டிமாண்ட் இயக்குநரான லோகேஷுடன் ரஜினி முதன்முதலாக சேர்ந்திருக்கிறார். படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டு பெயர் ஏப்ரல் 22ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் ஹிட்டுக்கு காத்துக்கொண்டிருந்த ரஜினி ஹேப்பி மூடில் இருக்கிறார். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்க படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜெய்பீம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாடு கவனத்தையும் ஈர்த்தவர் த.செ.ஞானவேல் என்பது குறிப்பிடத்தக்கது.

Here are the new details about Thalaivar 171 Movie Story

படத்தில் பெரும் பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படம் தமிழ் சினிமாவில் பெரும் ஹிட்டடிக்கும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

என்ன கதை?: இந்தப் படம் போலி என்கவுன்ட்டரை பற்றி பேசுவதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது காவல் துறை சிஸ்டத்துக்குள்ளேயெ இருந்துகொண்டு காவல் துறையால் நிகழ்த்தப்படும் போலி என்கவுன்ட்டர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் களமாடும்படி திரைக்கதையை ஞானவேல் அமைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினிக்கு தேவையான மாஸ், கமர்ஷியல் எலிமெண்ட்ஸ்களும் இதில் கட்டாயம் இடம்பெறும் என்பதை படத்தின் டைட்டில் டீசர் உணர்த்தியிருக்கிறது.

தலைவர் 171: இதற்கிடையே தற்போதைக்கு கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ரஜினிகாந்த் நடிக்கிறார். தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மெகா ஹிட்டாக கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக தனது டீமுடன் முழு மூச்சாக ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் இறங்கியிருக்கிறார் லோகி. படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்ட படம்?: ஜெயிலர் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை இந்தப் படம் இந்திய அளவில் பேசும்படியாக அமைத்துவிட வேண்டும் என லோகேஷுக்கு கலாநிதி மாறன் அறிவுறுத்தியிருப்பதாக இண்டஸ்ட்ரியில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் போஸ்டர் நேற்று திடீரென்று வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப்பட்டது.

என்ன கதை: படத்தின் போஸ்டரில் ரஜினி படு யூத்தாக இருக்கிறார். மேலும் அவரது கைகளில் தங்க கடிகாரங்களால் ஆன விலங்கு ஒன்றும்; அவருக்கு பின்னால் சுவர் கடிகாரம் ஒன்றும் இருக்கிறது. இந்தப் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. சூழல் இப்படி இருக்க ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் படத்தின் கதை குறித்து சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

அதாவது ஒரு தரப்பினர், இந்தப் படம் மாநாடு போன்று டைம் லூப் கான்செப்ட்டில் இருக்கும் அல்லது டைம் ட்ராவல் ஜானரில் இருக்கும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். இன்னொரு தரப்பினரோ இது ரோலக்ஸ் கேரக்டரின் ப்ரிக்வூலாகக்கூட இருக்கலாம் ஆனால் ஒன்று மட்டும் உறுதி இதுவும் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்கிறார்கள். இதில் எது உண்மை என்று லோகேஷ் கனகராஜுக்கே தெரியும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X