Vidaamuyarchi - அட விடாமுயற்சி பட டீமுக்கு அஜித் கொடுத்திருக்கும் ஐடியா இதுவா?.. ஒர்க் அவுட் ஆகுமா ஏகே

சென்னை: அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. விடாமுயற்சியை பொறுத்தவரை அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்காக வேறு லொக்கேஷன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

Here are the new details about Vidaamuyarchi Movie

விடாமுயற்சி: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் படத்தின் பெயர் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படத்திலிருந்து வரவில்லை. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் ஜோராக நடந்து முடிந்தது. அனிருத் இசையமைக்கிறார். அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்து தற்போது அடுத்த லொக்கேஷன் தேடும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மங்காத்தாவுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் அர்ஜுன் இணைந்திருப்பதால் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். சமீபத்தில்கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின.

ஷூட்டிங் அப்டேட்: அடுத்ததாக வெளிநாடு செல்லலாமா இல்லை ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் தஞ்சம் அடையலாமா என்று படக்குழு தீவிர யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. அஜித்துக்கு ராமோஜி பிலிம் சிட்டி ஃபேவரைட் ஸ்பாட் என்பதால் அநேகமாக RFCக்கு செல்வதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று கருதப்படுகிறது. சமீபத்தில்கூட படத்திலிருந்து ஒரு புகைப்படம் வெளியானது. அதில் கார் ஒன்று ஒரு பக்கம் சாய்ந்து வருவது போன்று இருந்தது. இதனால் படம் கண்டிப்பாக ஆக்‌ஷன் பேக்கேஜாக இருக்கும் என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

அஜித்தின் ஐடியா: இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது படத்திலிருந்து எந்த அப்டேட்டும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. அதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட விரக்தியில் இருக்கிறார்கள். கடைசியாக பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான அப்டேட்டில்; விடாமுயற்சி படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக மட்டுமே இருந்தது.

சூழல் இப்படி இருக்க படக்குழுவுக்கு அஜித் புதிய ஐடியா ஒன்றை கொடுத்திருக்கிறாராம். அதாவது இந்தத் தேதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவோம் என்று அறிவித்துவிட்டு போஸ்டரை வெளியிடாமல் திடீரென்று ஒருநாள் எந்த முன் அறிவிப்பும் இன்றி போஸ்டரை வெளியிட்டால் செம சர்ப்ரைஸாக இருக்கும் என்று சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதும்; ஒருவேளை அப்படி வெளியிட்டால் அது ஒர்க் அவுட் ஆகுமா என்பதும் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X