இன்னும் 2 நாட்களில் GOAT ஸ்பெஷல் சாங்.. விஜய் - திரிஷா ஆடிய பாடலா இருக்குமோ?.. செம அப்டேட்
சென்னை: வெங்கட் பிரபு கடையாக இயக்கிய கஸ்டடி திரைப்படம் சரியாக போகவில்லை. இதனையடுத்து விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கி முடித்திருக்கிறார் அவர். இந்தப் படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படத்தை தரமான ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று வெங்கட் கடுமையாக உழைத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.
கோலிவுட்டின் டாப் 2 இடங்களில் இருப்பவர் விஜய். அவரது படங்கள் அசால்ட்டாக பெரும் வியாபாரம் செய்யக்கூடியவை. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கி சேதாரம் அடைந்தது என்பது தனிக்கதை. இதன் காரணமாக விமர்சன ரீதியாக மிகப்பெரும் வரவேற்பை பெறும்படியான ஒரு படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விஜய் தீவிரமாக இருக்கிறார்.

GOAT: சூழல் இப்படி இருக்க அந்தப் பொறுப்பை வெங்கட் பிரபுவிடம் கொடுத்திருக்கிறார் விஜய். லியோ படத்தை முடித்துவிட்டு வெங்கட் இயக்கத்தில் GOAT படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். முக்கியமாக வெங்கட் பிரபுவுக்கும் அவரது கடைசி படமான கஸ்டடி காலை வாரியது. இதன் காரணமாக அவருக்கும் ஒரு கம்பேக் தேவைப்படுகிறது. எனவே இந்தப் படத்தை மெகா ஹிட் படமாக கொடுக்க உழைத்திருக்கிறார்.
இன்னொரு மங்காத்தா?: முக்கியமாக அஜித்தை வைத்து வெங்கட் பிரபு மங்காத்தா படத்தை இயக்கியபோது அவர் கடுமையான ட்ரோல்களை சந்தித்தார். அதேபோல்தான் கோட் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள்கள் ஆகியவை வெளியானபோது வெங்கட்டை விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். அதிலும் டீ ஏஜிங் லுக்கை பார்த்து உச்சக்கட்ட கொந்தளிப்படைந்தனர். ஆனால் மங்காத்தா படம் ரிலீஸாகி பெரும் சம்பவம் செய்தது போல் கோட் படமும் சம்பவம் செய்யும் என்று ஒருதரப்பு ரசிகர்கள் கூறுகிறார்கள்.
பக்கா ட்ரெய்லர்: அதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் GOAT படத்தின் ட்ரெய்லர் இருந்தது. அதில் மங்காத்தா ரெஃபரன்ஸ், கில்லி ரெஃபரன்ஸ் என பக்கா கமர்ஷியல் பேக்கேஜை இறக்கியிருந்தார் வெங்கட். மேலும் எந்த டீ ஏஜிங் லுக்கை பார்த்து ரசிகர்கள் கலாய்த்தார்களோ; அதே லுக்கை ட்ரெய்லரில் பார்த்து வாயடைத்து போய் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர். இதற்கிடையே இந்தப் படத்தில் விஜய்யும், திரிஷாவும் இணைந்து ஒரு பாடலில் நடனமாடியிருப்பதாக கூறப்படுகிறது.
உறுதி செய்த வெங்கட்?: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெங்கட் பிரபுவிடம் கோட் படத்தின் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'இன்னும் இரண்டு நாட்களிலிருந்து கோட் படத்திலிருந்து ஸ்பெஷலான பாடல் ஒன்று வெளியாகப்போகிறது. அதை பலர் பாடியிருக்கிறார்கள்' என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த ஸ்பெஷல் பாடல்தான் விஜய், திரிஷா இணைந்து நடனம் ஆடிய பாடலாக இருக்குமோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











