வசூலில் மாஸ் காட்டும் தங்கலான்.. பா.ரஞ்சித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸானது.மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. அதேசமயம் வசூலில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் தங்கலான் படத்துக்காக பா.ரஞ்சித் வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பா.ரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். அவர் இயக்கியதிலேயே மோசமான விமர்சனத்தை சந்தித்த படமாக அது அமைந்தது. மெட்ராஸ், அட்டகத்தி போன்ற அருமையான கதைகளை எழுதிய ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது மாதிரி ஒரு கதையை எழுதியிருக்கவே கூடாது. முகநூலில் நடக்கும் உரையாடல் போல் படம் நெடுக வாடை அடித்ததாக ஓபனாக பேசினர் ரசிகர்கள்.

Thangalaan Vikram Pa Ranjith

தங்கலான்: இப்படிப்பட்ட சூழலில் அவர் தனது அடுத்த படமாக விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார். எப்போதும் வித்தியாசமாக கதை தேர்வை செய்யும் விக்ரம் பா.ரஞ்சித்துடன் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதிர்வு தரும் ரஞ்சித்: கோலார் தங்க வயலில் சுதந்திரத்துக்கு முன்னர் வாழ்ந்த பழங்குடி தமிழ் மக்கள் எப்படியான வலிகளையும், வேதனைகளையும் சந்தித்தார்கள் என்பதை பா.ரஞ்சித் இந்தப் படத்தில் தொட்டிருக்கிறார். சமூகம் சார்ந்த விஷயங்களை ரஞ்சித் தொட்டால் அது பெரும் அதிர்வுகளை உண்டு பண்ணும். இப்போது அவர் கேஜிஎஃப்பை தொட்டிருப்பதால் கண்டிப்பாக கன்னடத்தில் வந்த கேஜிஎஃப்பை விடவும் ரஞ்சித் காட்டப்போகும் கேஜிஎஃப் அதிர்வை உண்டாக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

கலவையான விமர்சனம்: படமானது கடந்த 15ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இந்தப் படமும் சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் ஒருதரப்பினரோ தங்களது எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்று கூறிவருகிறார்கள். இப்படி கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் தங்கலான் இதுவரை 53 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

பா.ரஞ்சித் சம்பளம்: அதேபோல் பா.ரஞ்சித் இயக்கிய படங்களில் காலா, கபாலி படத்துக்கு பிறகு குறைந்த நாட்களில் அதிக வசூல் செய்த படமாகவும் தங்கலான் மாறியிருக்கிறது. இந்நிலையில் தங்கலான் படத்தை இயக்கியதற்காக பா.ரஞ்சித் சம்பளம் பெற்றதாக ஒரு தொகை கூறப்படுகிறது. அதாவது இப்படத்துக்காக அவர் 10 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்றார் என்று சொல்லப்படுகிறது.முன்னதாக இந்தப் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பும் திட்டத்திலும் படக்குழு இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X