வேட்டையன் முதல் விமர்சனம்.. எப்படி இருக்கு படம்?.. ரஜினியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில் பிரமாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. அதில் ரஜினிகாந்த் குட்டி கதை சொல்லி கலக்கினார். படத்தின் மீது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட ஆவல் எழுந்திருக்கிறது. கண்டிப்பாக ஜெயிலர் திரைப்படம் போல் இதுவும் பந்தயம் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கிறது வேட்டையன் திரைப்படம். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங், விருமாண்டி அபிராமி, துஷாரா விஜயன் என பலர் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக ரஜினிகாந்த் ஞானவேலுவுடன் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதுதான் இப்போது தமிழ் திரைத்துறையின் ஒட்டுமொத்த பார்வையும் இருக்கிறது. லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.

படத்தின் டீசர்: படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில மாதங்களில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதனைப் பார்த்தபோதே இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாகத்தான் உருவாகுமோ என்று சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பினார்கள். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வேட்டையன் டீசரும் வெளியிடப்பட்டது. அதனைப் பார்க்கையில் இந்தப் படம் முழுக்க முழுக்க ஞானவேலுவின் ஸ்டைலில் இல்லாமல் ரஜினிக்காக கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருப்பது உறுதியானது.
கலவையான விமர்சனம்தான்: ஞானவேலுவின் இயக்கம் என்பதால் இது கண்டிப்பாக ஜெய் பீம் போன்ற தாக்கத்தை உருவாக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் படத்தின் டீசர் அந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சரி கமர்ஷியலாகத்தான் எடுத்திருக்கிறார்கள்; அதையாவது ஒழுங்காக எடுத்திருப்பார்களா என்ற சந்தேகமும் டீசர் பார்க்கும்போது வருவதாகவும்; ரஜினியின் மேனரிசம் ஜெயிலரை நியாபகப்படுத்துவதாகவும் சொல்லி தங்களது கலவையான விமர்சனங்களையே ரசிகர்கள் டீசருக்கு கொடுத்திருக்கிறார்கள்.
அனிருத் இசை: படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஆனால் பாடல்கள் எல்லாம் வழக்கம்போல் அவரது ஸ்டைலிலேயே இருக்கின்றன. முக்கியமாக ஜெயிலரில் வந்த சூப்பர் ஸ்டார் புராணம் இந்தப் படத்திலும் வருவதால் ரசிகர்களில் பலருக்கு சலிப்பு தட்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி ரஜினியின் புகழை அனிருத் வைப்பதை விட்டுவிட்டு கதைக்கு தேவையான இசையை எப்போதுதான் வைப்பாரோ என்று ஒருதரப்பு ரசிகர்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதேசமயம் மனசிலாயோ பாடலில் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து மீண்டும் கொண்டுவந்ததை பாராட்டவும் தவறவில்லை.
முதல் விமர்சனம்: இப்படி படத்தின் டீசருக்கும், இசைக்கும் டல்லான விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. எனவே படம் மீது இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு குறைந்துவருவதை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதனை ரிலீஸுக்கு முன்னதாக அதிகரிப்பதற்கான வேலையை படக்குழு கண்டிப்பாக செய்யும் என்பது எதிர்பார்க்கலாம். இந்நிலையில் படத்தின் முதல் விமர்சனம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது பிக்பாஸில் கலந்துகொண்டு புகழடைந்த அபிஷேக், 'வேட்டையன் படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. ஃபகத் பாசில் வடிவேலு மாதிரி டிராக் காமெடியெல்லாம் செய்திருக்கிறாராம். படத்தை பார்த்துவிட்ட ரஜினிகாந்த்துக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறதாம்' என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் அபிஷேக் இப்படி சொன்னதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படத்தை பார்த்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











