Aranmanai 4 Twitter Review - அரண்மனை 4 எப்படி இருக்கு.. சம்பவம் செய்தாரா சுந்தர்.சி?.. ட்விட்டர் விமர்சனம்

சென்னை: சுந்தர்.சி இப்போது அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை இயக்கியிருக்கிறார். இதுவரை வெளியான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே இந்தப் படத்தின் நான்காவது பாகம் குறித்தும் ரசிகர்களிடம் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. அந்த எதிர்பார்ப்போடு படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இதில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்..

கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. இதுவரை ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் அவர். சுந்தரின் படத்துக்கு சென்றால் வயிறு வலிக்க சிரித்துவிட்டு வரலாம் என்பதுதான் ரசிகர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை பெரும்பாலும் சுந்தர்.சியும் காப்பாற்றியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. இந்தச் சூழலில் அவர் இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கியிருக்கிறார்.

Here are the Sundar C Aranmanai 4 Movie Twitter Review

அரண்மனை 4: இதுவரை சுந்தர்.சி இயக்கிய அரண்மனை சீரிஸில் இதற்கு முன் வந்த மூன்று பாகங்களும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றிருக்கின்றன. எனவே அரண்மனை 4 படத்துக்கும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதில் சுந்தர்.சி ராஷி கண்ணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பலத்த எதிர்பார்ப்போடு படம் இன்று வெளியாகியிருக்கிறது.

நல்ல புக்கிங்: படமானது கடந்த மாதமே வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் இன்றைக்கு தள்ளிப்போனது. சுந்தர்.சியின் அரண்மனை சீரிஸில் காமெடிக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பதைத்தான் இதற்கு முன்பு வெளியான மூன்று பாகங்களும் உணர்த்தின. எனவே இந்தப் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு நிலவியதால் படத்தின் டிக்கெட் புக்கிங்கில் நல்ல நிலவரமே நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக படக்குழுவும் கொஞ்சம் நிம்மதி அடைந்தது.

ரிலீஸானது அரண்மனை 4: இந்நிலையில் அரண்மனை 4 படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸாகியிருக்கிறது. இதுவரை படம் பார்த்தவர்கள் அரண்மனை 4 பற்றிய தங்களது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்திருக்கின்றனர். இதுவரை வந்திருக்கும் விமர்சனங்கள்படி பார்த்தால் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. அதில் சில விமர்சனங்களை இதில் பார்க்கலாம்.

அரண்மனை 4 சரியான கலவை: படத்தை பார்த்த இந்த ரசிகர், 'அரண்மனை 4 உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வழங்கியது. இது த்ரில்லர் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவைகளின் சரியான கலையாக வந்திருக்கிறது. தமன்னா ஜொலிக்கிறார். சுந்தர்.சியின் எனர்ஜி அவரது அனுபவத்தை உயர்த்துகிறது. யோகிபாபு சிரிக்க வைக்கிறார். படத்தின் செட்டுகள் பிரமாண்டமாக இருக்கிறது' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Here are the Sundar C Aranmanai 4 Movie Twitter Review

அரண்மனை 4 ஜாக்பாட்: இந்த ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'குழந்தைகளையும், குடும்ப ரசிகர்களையும் படம் கவர்ந்துவிட்டது. பி & சி சென் டர் தியேட்டர் ஓனர்களுக்கு ஜாக்பாட்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன்பு வந்த அரண்மனை படத்தின் மூன்று பாகங்களுமே குழந்தைகளை ரொம்பவே கவர்ந்தது என்பது நினைவுகூரத்தக்கது.

Here are the Sundar C Aranmanai 4 Movie Twitter Review

குழந்தைகளுக்கு பக்கா பொழுதுபோக்கு: படத்தை பார்த்த இந்த ரசிகர், 'சிஜி, இசை, மேக்கிங் போன்ற விஷயங்கள் முந்தைய அரண்மனை படங்களுடன் ஒப்பிடுகையில் நன்றாக இருக்கின்றன. திகில் காட்சிகள் நன்றாக ஒர்க அவுட் ஆகியிருக்கின்றன. இடைவேளைக்கு முந்தைய த்ரில்லர் காட்சிகள், ப்ரீ க்ளைமேக்ஸில் வரும் காமெடி காட்சி, அம்மன் பாடல், க்ளைமேகஸ் சண்டை அருமையாக இருக்கின்றன. குடும்ப ரசிகர்களுக்கும், குழந்தைகளுக்கும் சம்மர் பொழுதுபோக்கு' என்று புகழ்ந்திருக்கிறார்.

Here are the Sundar C Aranmanai 4 Movie Twitter Review

பக்கா எண்ட்டெர்டெய்னர்: படத்தை பார்த்த இந்த ரசிகை, 'Family Blockbuster லோடிங். சுந்தர்.சி பக்கா எண்ட்டெர்டெய்னர். தமன்னா அருமையாக வேலை செய்திருக்கிறார். யோகிபாபு, கோவை சரளா, விடிவி கணேஷின் காமெடி பட்டையை கிளப்புகிறது. இசை, விஎஃப் எக்ஸ் நன்றாக இருக்கின்றன. ப்ரீ க்ளைமேக்ஸ் அம்மன் பாடலும் நன்றாக இருக்கிறது. இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்கு சுந்தர்.சிக்கும், குஷ்பூவுக்கும் நன்றி' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Here are the Sundar C Aranmanai 4 Movie Twitter Review

இப்படி இதுவரை வந்திருக்கும் ட்விட்டர் விமர்சனம் படத்துக்கு பலம் சேர்க்கக்கூடியதாகவே இருக்கிறது. படம் பார்த்த பெரும்பாலானோர் சுந்தர்.சி சம்பவம் செய்துவிட்டார் என்றே கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X