அல்லு அர்ஜுனின் மனைவி யார் தெரியுமா?.. அடேங்கப்பா அவரது மகளா?.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

ஹைதராபாத்: ஐகான் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் அல்லு அர்ஜுன். சென்னையில்தான் தனது பள்ளி படிப்பை முடித்தார் அவர். பிறகு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி நடித்து வந்த அவரை பான் இந்தியா ஹீரோவாக மாற்றியது புஷ்பா திரைப்படம். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா 2 நேற்று வெளியாகி ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தை பெற்றுவருகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுனின் மனைவி குறித்த தகவல் வெளியாகியிருக்கிரது.

தெலுங்கு சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இவரது குடும்ப பின்னணியும் சினிமாவை கொண்டதுதான். அந்தவகையில் அல்லு அர்ஜுனும் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவருக்கு சில படங்கள் சரியாக போகாவிட்டாலும் ஆர்யா, ஆர்யா 2, வேதம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நன்றாகவே கை கொடுத்தது. இதன் காரணமாக டோலிவுட்டில் முக்கியமான ஹீரோ என்ற பெயரையும் அல்லு அர்ஜுன் பெற்று; தனக்கான ரசிகர்களையும் உருவாக்கிக்கொண்டார்.

Allu Arjun Pushpa 2 Sneha Reddy 2

புஷ்பா: ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மட்டும் அறியப்பட்டுக்கொண்டிருந்த அல்லு அர்ஜுனை வட மாநிலங்கள் பக்கமும் ஃபேமஸ் ஆக்கியது என்றால் அது புஷ்பா படம்தான். அந்தப் படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். ஃபகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். சுமாரான எதிர்பார்ப்போடுதான் அந்தப் படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. வசூலிலும் சக்கைப்போடு போட்டது.

புஷ்பா 2: அந்தப் படத்தின் வெற்றிக்கு புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. இந்தப் படம் நேற்று பான் இந்தியா அளவில் ரிலீஸானது. நிச்சயம் புஷ்பா படம் போன்றே இந்தப் படமும் மெகா ஹிட்டாகும் என்று அல்லுவின் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை படம் ஓரளவு பூர்த்தி செய்திருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாளில் மொத்தம் 170 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

Allu Arjun Pushpa 2 Sneha Reddy 2

அல்லு அர்ஜுனின் குடும்பம்: புஷ்பா 2வின் வெற்றியும் அல்லு அர்ஜுனின் மார்க்கெட்டை மேற்கொண்டு உயர்த்தும் என்று டோலிவுட் வட்டாரம் கணிக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கிடையே அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்த இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகனும், ஆராஎன்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் அல்லு அர்ஜுனின் மனைவியான சினேகா ரெட்டி யார் என்பது குறித்து தெரியவந்திருக்கிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

யார் இந்த சினேகா ரெட்டி: அதாவது நண்பர் ஒருவரின் திருமணத்தில்தான் அல்லு அர்ஜுனும், சினேகா ரெட்டியும் சந்தித்திருக்கிறார்கள். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியிருக்கிறது. பிறகு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். சினேகா ரெட்டி ஆந்திராவை சேர்ந்த பிரபல அரசியல்வாதி மற்றும் தொழிலதிபரான டி.சந்திரசேகர ரெட்டியின் மகள் ஆவார். சந்திரசேகர ரெட்டி இப்போது காங்கிரஸில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X