பிக்பாஸ் 8.. வாழ்வில் திருப்பம் கொடுக்குமா?.. சீரியலிலிருந்து வெளியேறிய நடிகை தர்ஷிகா யார் தெரியுமா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்று தொடங்கவிருக்கிறது. எப்போதும் களைகட்டும் பிக்பாஸ் இந்த சீசனில் எப்படி பயணப்படப்போகிறது என்பதை பார்ப்பதற்கு மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் இருக்கிறார்கள். பங்கேற்கவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று இந்தியா முழுவதும் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஒரு வீட்டுக்குள் குறிப்பிட்ட பேர் 100 நாட்கள் இருந்து விளையாடும்போது ஏகப்பட்ட சண்டைகள், சச்சரவுகள் நிகழும். முதலில் ஹிந்தியில் நடந்துவந்த பிக்பாஸ் இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடத்தப்படவிருக்கிறது. இந்த மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தனி மவுசு இருக்கிறது. அந்த 100 நாட்களும் பிக்பாஸ்தான் பேசுபொருளாக அமையும்.

பிக்பாஸ் 8: தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழு சீசன்கள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றில் ஒரு சீசனை தவிர்த்து மற்ற சீசனை கமல் ஹாசனே தொகுத்து வழங்கியிருந்தார். ஒரு சீசனை மட்டும் சிம்பு தொகுத்து வழங்கினார். கமல் தொகுத்து வழங்குகிறார் என்பதாலும் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவத்தை கொடுத்தார்கள். அதேசமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கமல் ஹாசன் சில விமர்சனங்களை சந்தித்தார் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த சீசனில் விஜய் சேதுபதி: சூழல் இப்படி இருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவிருக்கிறார். கமல் போல் இவரும் தொகுத்து வழங்குவாரா இல்லை வேறு ஸ்டைலில் கொண்டுபோவாரா என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். முக்கியமாக விஜய் சேதுபதி அடிப்படையில் நல்ல சிந்தனையாளரும்கூட. அவரது பேச்சுக்கள் எப்போதும் பல அர்த்தங்களை சொல்லிக்கொடுக்கும். எனவே சேது இந்த பிக்பாஸை எப்படி கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இன்றிலிருந்து நிகழ்ச்சி தொடங்குகிறது.
போட்டியாளர்கள்: இந்த சீசனில் போட்டியாளர்களாக தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர், இயக்குநர் ரஞ்சித், சீரியல் நடிகர் அர்னவ், அருண் பிரசாந்த், நடிகர் தீபக், கானா பாடகர் பால் டப்பா, கோகுல்நாத், நடிகர் விஜே விஷால், நடிகர் சந்தோஷ் பிரதாப், தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகை பவித்ரா ஜனனி, மகாராஜாவில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சச்சனா, நடிகை சுனிதா, நடிகை அன்ஷிதா, தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ஐஸ்வர்யா, நடிகை தர்ஷிகா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
பொன்னி சீரியல்: இவர்களில் நடிகை தர்ஷிகா பொன்னி சீரியலில் நடித்துவருகிறார். அதில் அவர் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் பிக்பாஸ் எட்டாவது சீசனில் கலந்துகொள்வதால் அந்த சீரியலிலிருந்து இப்போது விலகியிருக்கிறார். அவருக்கு பதிலாக சஞ்சனா அதில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
வாழ்க்கையில் மாற்றம் கிடைக்குமா?: பொன்னி சீரியலில் நடித்து பிரபலமான தர்ஷிகா அடிப்படையில் ஒரு மாடல். மேலும் வைப் வித் தர்ஷி என்ற பெயரில் யூட்யூப் சேனலையும் நடத்திவருகிறார். பொன்னி சீரியல் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தாலும் அவர் எதிர்பார்த்த திருப்பம் கரியரில் வரவில்லை. எனவேதான் அவர் பிக்பாஸில் கலந்துகொள்வதாக தெரிகிறது. பொன்னி கொடுக்காத பிரபல்யத்தை பிக்பாஸ் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











