பிரேம்ஜி அமரனின் மனைவி யார் தெரியுமா?.. அட இந்த வேலைதான் பார்க்குறாங்களா?.. வெளியான தகவல்கள்

சென்னை: பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகருமான பிரேம்ஜி அமரனுக்கு இன்று திருத்தணி முருகன் கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் அவர். ரொம்பவே சிம்ப்பிளாக நடந்து முடிந்தது திருமணம். அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன. இந்தச் சூழலில் பிரேம்ஜியை திருமணம் செய்துகொண்ட இந்து பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவரும் இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, இளைய மகன் பிரேம்ஜி அமரன் ஆவர். இவர்கள் இருவரும் சினிமாவில்தான் இருக்கிறார்கள். வெங்கட் பிரபு நடிகராக அறிமுகமாகி இப்போது ஃபேமஸான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜய்யை வைத்து இப்போது GOAT படத்தை இயக்கியிருக்கிறார். படமானது செப்டம்பர் மாதம் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Premgi Amaran Indhu

பிரேம்ஜி அமரன்: பிரேம்ஜி அமரனும் சினிமாவில் ஃபேமஸான நடிகர்தான். சிம்புதான் பிரேம்ஜியை தனது வல்லவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். இருந்தாலும் அதற்கு முன்னதாகவே யுவன் ஷங்கர் ராஜாவின் சவுட் இன்ஜினியராகவும், பாடகராகாவும், இசையமைப்பாளராகவும் பிரேம்ஜி தொடர்ந்து சினிமாவில் இருந்தது கவனிக்கத்தக்கது. சில படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக பார்ட்டி படத்துக்கு இசையமைத்திருந்தார். ஆனால் படம் வெளியாகவில்லை.

நடிகராக அப்ளாஸ்: தனது முதல் படமான வல்லவன் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவருக்கு, சென்னை 600028 திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களிலுமே இருந்தார். வெங்கட் பிரபு படங்கள் மட்டுமின்றி வேறு இயக்குநர்கள் படத்திலும் நடிக்க ஆரம்பித்தார் அவர். குறிப்பாக அவர் தனது கைகளை வைத்து செய்யும் ஒரு ஆக்‌ஷன் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்திருக்கிறது. அதுவே அவரது அடையாளமாகவும் இருக்கிறது.

முரட்டு சிங்கிள்: பிரேம்ஜிக்கு 45 வயது ஆகிறது . ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டால் நான் ஒரு முரட்டு சிங்கிள் என்று சொல்லி ஏதோ ஒரு காரணத்தை ஜாலியாக கூறிவிட்டு எஸ்கேப் ஆகிக்கொண்டே இருந்தார். சூழல் இப்படி இருக்க, பிரேம்ஜி திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று சில நாட்களுக்கு முன்பு வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி இன்று காலை திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடந்து முடிந்தது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.

யார் இந்த இந்து: பிரேம்ஜி அமரன் திருமணம் செய்துகொண்டிருக்கும் பெண் பெயர் இந்து. அவர் சேலத்தை சேர்ந்தவர் என்றும்; முதலில் அவர்தான் பிரேம்ஜியிடம் காதலை சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் அவர் வங்கியில் பணியாற்றுபவர் என்றும்; அவர்தான் திருமணத்தை சிம்ப்பிளாக முடித்துக்கொள்ளலாம் என்ற ஐடியாவை சொன்னதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X