கருணாநிதியை பார்த்து பம்மிவிட்டாரா ரஜினிகாந்த்?.. முதல்வன் பட சம்பவம் பெருசா இருக்கே

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக அவரது மகள் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்றிருந்தார். ஆனால் அந்தப் படம் வந்த இடம் தெரியாமல் போனது. இப்போது கூலி படத்தில் நடித்துவரும் அவர்; த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது.

ரஜினிகாந்த் என்ற பெயர் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் பெரும்பாலும் ஹிட் படங்களையே கொடுத்திருக்கிறார். அவரது நடை, உடை, பாவனைக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. முக்கியமாக சாமானியர்கள் முதல் ஸ்டார்கள்வரை ரஜினிகாந்த்தைத்தான் தங்களது முதல் ஸ்டாராக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவரது தாக்கம் விலக்க முடியாதது.

Vettaiyan Rajinikanth Karunanidhi


சின்ன சறுக்கல்: ரஜினிகாந்த் இடையில் சின்னதாக சறுக்கினார். அவர் நடித்த தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை. அதனையடுத்து அவரது சூப்பர் ஸ்டார் நாற்காலி தடுமாறிவிட்டதாக கூறினர். ஆனால் அதெல்லாம் தடுமாறவில்லை என்பதை ஜெயிலர் படத்தில் நிரூபித்தார் ரஜினி. அப்படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்ததாக தனது மகள் இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த லால் சலாம் படம் பயங்கரமாக வாரிவிட்டது.

வேட்டையன், கூலி: இப்போது அவர் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படம் கண்டிப்பாக பெரிய சம்பவமாக செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அந்தப் படத்துக்கு போட்டியாக சூர்யா நடித்திருக்கும் கங்குவா படமும் அன்றைய தினம் வெளியாகிறது. வேட்டையன் படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார்.

அரசியல் ஆசை: இதற்கிடையே அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கும் அடித்தளமிட்டிருந்தார் ரஜினி. 1990களிலிருந்து சொல்லிவந்த அவர் ஒருவழியாக 2017ஆம் ஆண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்று தெரிவித்தார். அது பெரும் ட்ரோலுக்குள்ளானது. பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை அரசியல் களமாடலில் இருந்து பின்வாங்கினார். அதேசமயம் அரசியல் மேடையில் ஏறுவதை தவிர்க்கவில்லை. அந்தவகையில் அமைச்சர் ஏ.வ.வேலு கருணாநிதி பற்றி எழுதியிருக்கும் கலைஞர் எனும் தாய் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் ரஜினி.

ஏ.வ.வேலு பேச்சு: அந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.வ.வேலு, “எனக்கு சினிமா ஆர்வம் எப்போதும் உண்டு. விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்திருக்கிறேன். ஒருமுறை முதல்வன் பட கதை ரஜினிக்கு சென்றிருக்கிறது. ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார். அப்போது அவருடன் இருந்தவர்கள், கதை நன்றாக இருக்கிறது. நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ரஜினியோ, இப்போது பெரியவர் (கருணாநிதி) தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் முதல்வன் என்ற பெயரில் நான் படம் நடித்தால் நன்றாக இருக்காது என்று கூறியிருக்கிறார்” என்றார். இதனை பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர் அட கருணாநிதியை பார்த்து ரஜினி பம்மிவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X