Rajini - மாற்றுத்திறனாளியென பரவிய வதந்தி.. ரஜினி மகள் ஐஸ்வர்யாவின் சிறு வயதில் இப்படி ஒரு சோதனையா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக ஜெயிலர் படம் போலவே இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இந்தச் சூழலில் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் ஆரம்பகாலம் பற்றிய ஒரு தகவல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். 80களில் லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரஜினிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்தார். பிறகு 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இளைய மகள் சௌந்தர்யா கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. சௌந்தர்யா முதலில் அஷ்வின் என்பவரை திருமணம் செய்தார். அந்தத் திருமணம் பாதியில் முடிந்ததை அடுத்து விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

சேர்த்து வைக்க முயற்சி: இதற்கிடையே தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களது திருமண வாழ்க்கையும் 15 வருடங்களுக்கும் மேலாக சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் சில வருடங்களுக்கு முன்பு பிரிந்தார்கள். தங்களது தனித்தனி வழிகளில் தாங்கள் செல்கிறோம் என்று அறிவித்தாலும்; சட்டப்படி விவாகரத்து இன்னும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரையும் எப்படியாவது சேர்த்து வைக்க முயற்சிகள் நடந்துவருகின்றன. தற்போது ஐஸ்வர்யா லால் சலாம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படமானது நாளை ரிலீஸாகவிருக்கிறது.
ரஜினிகாந்த்தின் மனநிலை: ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் அவரும் ஒரு சராசரி தந்தைதான். எனவே தனது இரண்டு மகள்களின் திருமண வாழ்க்கை குறித்து அவருக்கு கவலைகள் இருந்தன. அதில் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததை அடுத்து அந்தக் கவலை தீர்ந்து போனது. ஆனால் முதல் மகளின் திருமண வாழ்க்கை குறித்து இன்னும் அவர் கொஞ்சம் சங்கடத்தில் இருப்பதாகவே பலரும் கூறுகிறார்கள்.
மறைத்து வைத்த ரஜினிகாந்த்: தனது இரண்டு மகள்கள் மீதும் அபரிமிதமான பாசத்தை வைத்திருப்பவர் ரஜினிகாந்த். அதனால்தான் அவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்டு நடந்தார். இந்தச் சூழலில் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் ஆரம்பகாலம் பற்றி புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அதாவது ஐஸ்வர்யா பிறந்தபோது அவரது புகைப்படத்தையோ, தனக்கு என்ன குழந்தை பிறந்திருக்கிறது என்பதையோ ரஜினிகாந்த் வெளியில் சொல்லவே இல்லையாம்.
மண்டோதரி: ஒருகட்டத்தில் அவருக்கு பிறந்திருப்பது பெண் குழந்தைதான் என்பது தெரியவந்திருக்கிறது.ஆனால் பெயர் பற்றிய விவரம் தெரியவில்லையாம். இதனையடுத்து பத்திரிகையாளர்களே ஐஸ்வர்யாவுக்கு புது பெயர் ஒன்றை வைத்தனர். அதன்படி ரஜினிகாந்த் தனது மகளுக்கு மண்டோதரி என்று பெயர் வைத்திருப்பதாக எழுதினார்களாம். ஆனாலும் ரஜினிகாந்த் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
மாற்றுத்திறனாளி: பத்திரிகையாளர்கள் எவ்வளவோ ட்ரிகர் செய்தும் ரஜினிகாந்த் தனது மகள் பற்றிய எந்தத் தகவலையும் வெளியில் தெரிவிக்கவில்லையாம். ஒருகட்டத்தில் ரஜினிகாந்த் ஏன் தனது மகளை வெளியில் காட்டாமல் வளர்க்கிறார். அதற்கு காரணம், அவரது மகள் ஒரு மாற்றுத்திறனாளி என்றும் பத்திரிகைகளில் எழுதப்பட்டனவாம். அதற்கும் அசராத ரஜினி தனது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். இதனையடுத்து காலம் செல்ல செல்ல ரஜினியின் மகள் பெயர் ஐஸ்வர்யா என்றும்; அவர் முழு உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் வெளியுலகுக்கு தெரியவந்திருக்கிறது. இந்தத் தகவல்தான் முகநூலில் பரபரப்பாக சுற்றிவருகிறது.


Click it and Unblock the Notifications











