சிவகார்த்திகேயன் ஏன் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார் தெரியுமா?.. என்னென்ன செஞ்சிருக்காங்க பாருங்க
சென்னை: சிவகார்த்திகேயன் அசுர வளர்ச்சியடைந்து இப்போது டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக மாறிவிட்டார். இந்த இடத்தை அவருக்கு கடைசியாக வெளியான அமரன் திரைப்படம்தான் கொடுத்தது. ஏனெனில் அந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது. அதாவது மொத்தம் 350 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருக்கிறது. அடுத்ததாக அவரது கைவசம் ஏராளமான படங்கள் இருக்கின்றன. இந்தச் சூழலில் அவரது மனைவி பற்றி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி புயல் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் 350 கோடி ரூபாயை வசூலித்தது. அதற்கும் முன்னதாக வெளியான அயலான், மாவீரன் ஆகிய திரைப்படங்கள் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கின. இதன் காரணமாக எஸ்கேவின் மார்க்கெட்டும் உச்சத்தில் போய் நிற்கிறது. இதனால் அவரும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஷன் ஹீரோ: அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனை முழு ஆக்ஷன் ஹீரோவாகவும் மாற்றியிருக்கிறது. படத்தில் வரும் ஒவ்வொரு சண்டை காட்சியிலும் எஸ்கேவின் மிடுக்கும், கம்பீரமும் ரசிகர்களை வாயை பிளக்க வைத்தன. அதேபோல் சாய் பல்லவியுடனான காதல் காட்சிகளிலும் அவர் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக நல்ல நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார். மேலும் சிவாவின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது என்றும் பலர் சொல்கிறார்கள்.
அடுத்த படங்கள்: அமரன் வெற்றிக்கு பிறகு எஸ்கேவின் படங்களுக்கென்று பெரும் எதிர்பார்ப்பு உருவாக ஆரம்பித்துவிட்டது. அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இவற்றி முருகதாஸுடனான படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. புறநானூறு ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கவிருக்கிறது.
எஸ்கே குடும்பம்: இதற்கிடையே க்ளீன் பாய் என்ற இமேஜையும் பெற்றிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஆர்த்தி என்ற மனைவி இருக்கிறார். மேலும் ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ், பவன் என்ற மகன்களும் இருக்கிறார்கள். இவர்களில் மூன்றாவது குழந்தையான பவன் இந்த வருடத்தில்தான் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்கேவின் மனைவி ஆர்த்தியை பொறுத்தவரை ரொம்பவே அமைதியாக இருப்பவர் என்றுதான் பலரும் நினைப்பார்கள். அவரும் சிவகார்த்திகேயனுடன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அப்படித்தான் இருப்பார்.
யார் இந்த ஆர்த்தி: ஆனால் தனக்கு நெருக்கமானவர்களிடம் சிவகார்த்திகேயனைவிடவும் அதிகம் கவுண்ட்டர்களை கொடுப்பாராம் ஆர்த்தி. அவர் எஸ்கேவின் மாமா மகள்தான். சிவாவின் தந்தை தாஸ் இறந்த பிறகு அவரது குடும்பத்தை ஆர்த்தியின் தந்தைதான் முழுதாக பார்த்துக்கொண்டாராம். அதன் காரணமாகவே சிவகார்த்திகேயனுக்கு தனது சகோதரர் மகளையே கட்டி வைத்துவிட்டாராம் சிவாவின் தாய். இப்போது சிவகார்த்திகேயன் நடத்திவரும் ட்ரஸ்ட்டை மேற்பார்வை செய்துவரும் ஆர்த்தி; யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் இவரே எஸ்கே சார்பாக நேரில் சென்று செய்வாராம்.


Click it and Unblock the Notifications











