சசிகுமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி எப்படி இருக்கு?.. சசிக்கு ஹாட்ரிக்கா?.. ட்விட்டர் விமர்சனம்

சென்னை: அபிஷன் ஜீவிந்த் என்ற புதுமுக இயக்குநர் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்டோரை வைத்து டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கு முன்னதாக சசி நடித்திருந்த நந்தன், அயோத்தி ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. எனவே இந்தப் படமும் வெற்றி பெற்று அவருக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார்கள்.

சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சசிகுமார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனைத் தொடர்ந்து அவர் ஈசன் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இயக்கத்தில் கவனம் செலுத்துவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அவரோ நடிகராக பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். எதார்த்தமான நடிப்பால் வரிசையாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறார் அவர். அவருக்கென்று ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இரண்டு படங்கள் ஹிட்: சசிகுமாரின் நடிப்பு பயணத்தில் கடைசியாக வெளியான நந்தன், கருடன் ஆகிய இரண்டு படங்களும் ஹிட்டடித்தன. இரு படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டன. இதன் காரணமாக கோலிவுட்டின் மினிமம் கியாரண்ட்டி ஹீரோ என்ற நிலையையும் சசி அடைந்திருக்கிறார். முக்கியமாக அடிப்படையில் அவர் ஒரு இயக்குநர் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் வித்தியாசமானதாகவும், உணர்வுப்பூர்வமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

டூரிஸ்ட் ஃபேமிலி: வரிசையாக இரண்டு ஹிட் படங்களில் நடித்த சசிகுமார் இப்போது அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அபிஷன் ஜீவிந்த் என்ற புதுமுகம் படத்தை இயக்கியிருக்கிறார். சசியுடன் சிம்ரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் படத்தை தயாரித்திருக்கிறார். படமானது சூர்யாவின் ரெட்ரோவுக்க் போட்டியாக நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு சென்னையில் வைத்து டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது.

Here are Tourist Family Movie Twitter Review

படம் பார்த்தவர்களின் விமர்சனம்: இந்நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் வைத்துவருகிறார்கள். அதன்படி படம் பார்த்த ஒருவர், 'டூரிஸ்ட் ஃபேமிலி அருமையான திரைப்படம். படம் சிம்ப்பிளாகவும் இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது. மனது முழுமையடைந்திருக்கிறது. இந்த வருடத்தில் என்னுடைய ஃபேவரைட் திரைப்படம் இதுதான்' என்று குறிப்பிட்டிருக்கிறார்

போரே அடிக்கவில்லை: அதேபோல் இன்னொரு ரசிகர், 'படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும்வரை போரே அடிக்கவில்லை. படத்தின் நீளம் பெரிதாக இருந்தாலும் அதுவும் ப்ளஸ்ஸாகத்தான் இருக்கிறது. ஷான் ரோல்டனின் பின்னணி இசையும், பாடல்களும் அருமையாக இருக்கின்றன. அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஃபீல் குட் சினிமாவை இயக்குநர் நமக்கு கொடுத்திருக்கிறார்' என தெரிவித்திருக்கிறார்.

மேலும் இன்னொரு ரசிகரோ, டூரிஸ்ட் ஃபேமிலி அருமையான திரைப்படம். தியேட்டர்களில் பார்ப்பதை மிஸ் செய்ய வேண்டாம். இந்த வருடத்தின் வின்னர் இந்தப் படம்தான் என புகழ்ந்திருக்கிறார்.

சசிகுமாருக்கு ஹாட்ரிக் வெற்றி: மற்றொரு ரசிகர், 'டூரிஸ்ட் ஃபேமிலி ஃபீல் குட் திரைப்படம். அயோத்தி, நந்தனைத் தொடர்ந்து சசிகுமாருக்கு இந்தப் படம் ஹாட்ரிக் வெற்றி. அவருக்கு சமூக பொறுப்புணர்வு இருக்கிறது. சிம்ரன் மீண்டும் வந்துவிட்டார்' என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்கள்: படத்தை பார்த்த இவர், 'இந்தப் படத்தை தவறவிடாதீர்கள். கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று தியேட்டரில் பாருங்கள்.ஃபீல் குட் திரைப்படமாக இருக்கிறது. படத்தின் இயக்குநர் அபிஷன் மிக அருமையாக கதையை ரெடி செய்திருக்கிறார். புதுமுக இயக்குநர் நல்ல நம்பிக்கையை தந்திருக்கிறார்' என கூறியுள்ளார்.

இப்படி இதுவரை படம் பார்த்த அனைவருமே படத்துக்கு தங்களது மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள். எனவே நாளை ரசிகர்களும் படத்தை பார்த்து கொண்டாடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X