சாந்தி.. சாந்தி.. மனைவி மீது கவுண்டமணிக்கு இவ்வளவு காதலா?.. யப்பா வேற லெவல்தான்
சென்னை: கவுண்டமணி வயோதிகம் காரணமாக தற்போது சினிமாவில் முன்னர் போல் அதிகம் நடிப்பதில்லை. அதேசமயம் எந்த காமெடி சேனலை பார்த்தாலும், எந்த மீமை பார்த்தாலும் அதில் கவுண்டமணி இன்னும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். இதன் காரணமாக கவுண்டமணிக்கு எப்போதும் அழிவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். சூழல் இப்படி இருக்க அவரது மனைவி சாந்தி உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார். சாந்தியின் உயிரிழப்பு கவுண்டமணிக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கவுண்டமணி தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் யாராலும் மறக்க முடியாதது, மறுக்க முடியாதது. அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்பதுதான் உண்மை. அவர் அடிக்கும் ஒவ்வொரு கவுண்ட்டரும் ரகளையாக இருப்பவை. இதனாலேயே இன்றளவும் அவர் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இப்போது அவர் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்துவருகிறார். மீண்டும் அவர் நடிக்க வந்திருப்பதால் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
செம காம்போ: எவர்க்ரீன் காமெடி காம்போ கவுண்டமணியும், செந்திலும் ஆவர். பல நூறு படங்களில் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கியிருக்கின்றனர். குறிப்பாக வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் என அவர்கள் அதகளம் செய்த திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் பெரிது. ஒருகட்டத்தில் கவுண்டமணி இல்லாமல் செந்தில் இல்லை செந்தில் இல்லாமல் கவுண்டமணி இல்லை என்ற நிலையே திரைத்துறையில் நீடித்தது. அந்த அளவுக்கு இருவரும் நெருங்கி பழகினார்கள். கவுண்டமணி நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தபோது மீண்டும் நடிக்க வர வேண்டுமென்று அவருக்கு நீண்ட கடிதத்தையும் செந்தில் எழுதியது குறிப்பிடத்தக்கது.

கவுண்டமணியின் குடும்பம்: இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் அவர் கடைசியாக ஒத்த ஓட்டு முத்தையா ரிலீஸானது. படம் போதிய வரவேற்பை பெறவில்லை. கவுண்டமணியின் குடும்பத்தை பொறுத்தவரை அவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்தார். அதேபோல் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேருமே சினிமாவை தவிர்த்து வெவ்வேறு துறைகளில் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள்.
சாந்தி மரணம்: சூழல் இப்படி இருக்க கவுண்டமணியின் மனைவியான சாந்திக்கு கடந்த சில காலமாகவே உடல்நல குறைவு ஏற்பட்டது.சிகிச்சையில் இருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு கவுண்டமணியை ஆறாத சோகத்தில் தள்ளியிருக்கிறது. சாந்தியின் மரணத்தை கேள்விப்பட்டு செந்தில், சத்யராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி கவுண்டமணிக்கு ஆறுதல் தெரிவித்தார்கள்.
கவுண்டமணியின் சென்ட்டிமென்ட்: எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைத்த கவுண்டமணி இன்று இடிந்து போய் அமந்திருந்தது அனைவரையும் கலங்கடித்தது. இந்நிலையில் அவர் குறித்தும் சாந்தி குறித்தும் அவரது மேனேஜர் மதுரை செல்வம் பல விஷயங்கள பேசியிருக்கிறார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சாந்தி இறந்ததன் காரணமாக கவுண்டமணி மனம் கலங்கி போயிருக்கிறார். இரண்டு பேரும் அவ்வளவு ஒற்றுமையாக இருப்பார்கள். ஒருவரை ஒருவர் அக்கறையோடு பார்த்துக்கொள்வார்கள். காதலித்துதான் திருமணம் செய்துகொண்டார்கள்.
திருமணத்துக்கு பின் ஏற்றம்தான்: திருமணம் செய்துகொண்ட பிறகு கவுண்டமணியின் கரியர் ஏற்றம் கண்டது. மனைவி வந்த நேரத்தில் தன்னுடைய கரியர் ஏற்றம் கண்டதால் சாந்தி மீது தனி பிரியம் வைத்திருந்தார். வீட்டுக்குள் வந்தாலே சாந்தி, சாந்தி என்றுதான் கூப்பிட்டபடி இருப்பார். வீட்டை நிர்வாகம் செய்தது, மகள்களை வளர்த்தது என அத்தனையுமே சாந்திதான். தான் வாங்கும் சம்பளத்தை அப்படியே சாந்தியிடம் கொடுப்பார் கவுண்டமணி. அதேபோல் வெளியே செல்லும்போது சாந்தி கைகளால் செலவுக்கு பணம் வாங்குவதை ஒரு சென்டிமென்ட்டாகவே வைத்திருந்தார். மகள்களும் அம்மா மீது பாசம் வைத்திருந்தார். சாந்தியின் மறைவால் கலங்கிப்போயிருக்கும் கவுண்டமணிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











