ஜாய் கிரிஸில்டாவின் முதல் மகன் நிலைமை என்ன தெரியுமா?.. அய்யோ பாவம்.. நடிகை வேதனை
சென்னை: ஜாய் கிரிஸில்டா முதலில் ஃபெட்ரிக் என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்று விவாகரத்து செய்துவிட்டார். அவரைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜுடனான திருமணமும் பிரச்னையில் இருக்கும் சூழலில்; முதல் கணவருக்கு பெற்ற மகனின் நிலைமை பற்றியும் பலர் வேதனை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை ஷர்மிளா வேதனையுடன் பேசியிருக்கிறார்.
பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஜெ.ஜெ.ஃபெட்ரிக்கை திருமணம் செய்துகொண்டார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா. அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். ஆனால் சில காரணங்களால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்தில் சென்று முடிந்தது. அதனையடுத்து முதல் கணவருக்கு பெற்ற மகன் ஜேடனை தன்னுடையே வளர்த்தும்வருகிறார் ஜாய் கிரிஸில்டா.
ரங்கராஜ் பாசம்: இதற்கிடையே மாதம்பட்டி ரங்கராஜுடன் காதலில் விழுந்து அவரையும் திருமணம் செய்துகொண்டார் ஜாய். ஜேடனுக்கு ரங்கராஜை தந்தை என்றே அறிமுகம் செய்து வைத்ததாகவே தெரிகிறது. ரங்கராஜுடம் ஜேடனிடம் ஆரம்பத்தில் ஒரு தந்தை போன்று நடந்துகொண்டதாக அவர்களுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை பூதாகரமாக வெடித்திருக்கிறது.

விடாப்பிடியாக ரங்கராஜ்: தற்போது ஜாய் கிரிஸில்டாவுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துவிட்டது. இதன் காரணமாக குழந்தையையும், தாயையும் ஏற்றுக்கொள்வார் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் ரங்கராஜோ நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பெரிய ட்விஸ்ட் அடித்தார். இந்த விவகாரத்தில் முதல் மனைவி ஸ்ருதியும் ரங்கராஜுக்கு பக்கபலமாக நின்றுகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து அட்டாக்: ஸ்ருதியும், ரங்கராஜும் சேர்ந்து ஓரணியில் நின்றுகொண்டு ஜாய் கிரிஸில்டா தொடுக்கும் தாக்குதல்களை சமாளித்துவருகிறார்கள். இருந்தாலும் கிரிஸில்டா தொடர்ந்து ரங்கராஜை தனது வழிக்கு கொண்டுவரக்கூடிய அத்தனை வேலைகளையும் செய்துவருகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ரங்கராஜ் - ஸ்ருதிக்கு பிறந்த இரண்டு மகன்கள், கிரிஸில்டா - ஃபெட்ரிக்குக்கு பிறந்த ஒரு மகன், இப்போது பிறந்திருக்கும் ஆண் குழந்தை ஆகியோரின் நிலைமைதான் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.
ஷர்மிளா பேட்டி: இந்நிலையில் பிரபல் நடிகை ஷர்மிளா இதுகுறித்து பேசுகையில், "ஜாய் கிரிஸில்டா பாவம் என்று சொல்கிறீர்கள். அவருக்கு பிறந்த முதல் கணவருடைய குழந்தைதான் பாவம். அந்த பையனை முதலில் நல்ல மனநிலைமையோடு ஜாய் கிரிஸில்டா வளர்க்கிறாரா. ஒரு தாயாக துரோகம் செய்கிறார். அந்த பையனுக்கு அப்பா பாசம்தான் கிடைக்கவில்லை. அம்மா பாசமாவது கிடைக்க வேண்டும். ரங்கராஜை கொண்டு வந்து தந்தை மாதிரி பழகவிட்டார். அவரை தந்தை என்றுதான் அழைப்பேன் என அந்தப் பையனும் ஒரு பேட்டியில் சொல்கிறான்.
அவர்களும் பாவம்: இப்போது ரங்கராஜ் மீண்டும் வந்து அந்தப் பையனிடமும் பாசமாக பேச முடியாது. இவருடைய சுயநலத்தால் அதையும் அறுத்துவிட்டார் கிரிஸில்டா. அதுமட்டுமின்றி அவர் மூலம் ஒரு குழந்தையை பெற்றுவிட்டார். இப்போது முதல் கணவருக்கு பிறந்த மகனை ரங்கராஜ் மதிப்பாரா. இது இந்தப் பக்கம் என்றால் ஸ்ருதி - ரங்கராஜுக்கு பிறந்த மகன்களும் நிம்மதியை இழந்திருப்பார்கள்தான். ஆகமொத்தம் இதில் இந்தக் குழந்தைகள்தான் பாவம்" என்றார்.


Click it and Unblock the Notifications











