Thalaivan Thalaivi Box Office - விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி.. இரண்டாவது நாள் வசூல் மாஸ்தான்
சென்னை: விஜய் சேதுபதி, நித்யா மேனன், ஆர்.கே.சுரேஷ், சரவணன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் தலைவன் தலைவி திரைப்படம் நேற்று முன்தினம் (ஜூலை 25ஆம் தேதி)ரிலீஸானது. பாண்டிராஜ் இயக்கியிருந்த அப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. குடும்ப ரசிகர்களிடம் படம் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கும் சூழலில்; படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி முதன்முறையாக நடித்திருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. இதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சரவணன், ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், தீபா, யோகிபாபு என பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க; சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக படத்தை தயாரித்திருந்தது.
சூப்பர் வரவேற்பு: படமானது நேற்று முன்தினம் ரிலீஸானது. ட்ரெய்லர் வெளியானபோதே இந்தப் படம் கண்டிப்பாக குடும்ப ரசிகர்களிடம் கனெக்ட் ஆகிவிடும் என்றே கணிக்கப்பட்டிருந்தது. அந்த கணிப்புபடியே முதல் நாளின்போது பலரும் குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்த்தார்கள். அவர்கள் அனைவருக்குமே படம் ரொம்பவே திருப்தியை கொடுத்தது. அனைவருமே படத்தை என்ஜாய் செய்து பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் என்ன மைனஸ்: படம் மிகப்பெரிய வரவேற்பை குடும்ப ரசிகர்களிடம் பெற்றாலும் ஒருதரப்பினரிடம் கொஞ்சம் நெகட்டிவ் விமர்சனத்தையும் வாங்கியிருக்கிறது. அதாவது பாண்டிராஜ் படங்கள் என்றாலே அதில் கண்டிப்பாக அனைவரையும் கலங்கடிக்கும் ஒரு எமோஷன் சீனாவது இருக்கும் என்ற நிலைதான் நீடிக்கிறது. ஆனால் இதில் அப்படி எதுவுமே இல்லை; எடுத்துக்கொண்ட ஒன்லைன் நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் இந்தப் படம் சூப்பராக வந்திருக்கும் என்பதுதான் பலரது கருத்து.
படம் ஹிட்தான்: இப்படி ஒருசில நெகட்டிவ் விமர்சனத்தை படம் பெற்றாலும்; குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்ற நிலைக்கு படம் ரிலீஸான முதல் நாளே நகர்ந்துவிட்டது. கண்டிப்பாக போகப்போக கூட்டம் அதிகம் கூடும் என்பதால்; விஜய் சேதுபதிக்கும், பாண்டிராஜுக்கும் இது ஹிட் பட லிஸ்ட்டில்தான் சேர்ந்திருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு குட் ரெஸ்பான்ஸே கிடைத்திருக்கிறது.
வசூல் எவ்வளவு?: படம் வெளியான முதல் நாளில் மொத்தம் நான்கு மோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக Sacnilk வலைதளம் தெரிவித்திருந்தது. இது சேது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இநிந்லையில் இரண்டாவது நாளான நேற்று படம் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது தொடர்பான விவரத்தை அந்த வலைதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி நேற்று இப்படம் 6.75 கோடி ரூபாய் வசூலித்து; இதுவரை மொத்தம் 11.25 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











