வெளியே சொல்ல முடியாத பிரச்னை.. வீக்காக ஃபீல் செய்தேன்.. விஜய் சேதுபதி மகன் உருக்கம்
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக ஏஸ், மகாராஜா ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களில் ஏஸ் தோல்வியை சந்தித்தது. சூழல் இப்படி இருக்க அவரது மகன் சூர்யாவும் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஃபீனிக்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தில் அவருடன் வரலட்சுமி, தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் உருக்கமாக பேசினார் சூர்யா.
விஜய் சேதுபதி கோலிவுட்டின் திறமை வாய்ந்த நடிகர்கள். ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் இடையில் நடித்தவர் இப்போது ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார். அதன்படி ஏஸ், மகாராஜா ஆகிய இரண்டு படங்களில் கடைசியாக நடித்தார். அவற்றில் மகாராஜா மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்திருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க அவரது மகனும் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
ஃபீனிக்ஸ்: சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியிருக்கும் ஃபீனிக்ஸ் படத்தில்தான் சூர்யா சேதுபதி கதாநாயகனாக களமிறங்கியிருக்கிறார். இதில் அவருடன் வரலட்சுமி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படம் ஜூலை 4ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சூர்யா சேதுபதி ரொம்பவே உருக்கமாக பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சூர்யாவின் பேச்சு: அவர் பேசுகையில், "இப்படத்தில் கமிட்டான இரண்டு வருடங்களில் நிறைய சர்ச்சைகள். படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற பயமும் இருந்தது. ஆனால் இதிலிருந்து நான் ஒன்று கற்றுகொண்டேன். அனைத்தையும் பாடமாக எடுத்துக்கொண்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் இன்று இந்த மேடையில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய குடும்ப்ம், நண்பர்கள், பத்திரிகையாளர்கள், சக நடிகர்கள்தான்.
வீக்காக நினைத்திருக்கிறேன்: எப்போதுமே என்னை நான் ரொம்பவே வீக்காகத்தான் நினைத்திருக்கிறேன். அந்த சர்ச்சைகள் வந்த பிறகு ஸ்ட்ராங்காக நடித்துவிடுவோமா என்ற குழப்பமும் இருந்தது. உள்ளே நான் வீக்காக ஃபீல் செய்தாலும் அதனை வெளியே யாரிடமும் காட்டிக்கொள்ளமட்டேன். ஆனாலும் என்னுடன் நடித்தவர்கள் அதை புரிந்துகொண்டு ஒவ்வொரு சீனிலும் எனக்கு துணையாக இருந்தார்கள்.முக்கியமாக தேவதர்ஷினி மேடமை சொல்ல வேண்டும். அவர் நிஜத்திலும் எனக்கு அம்மாதான்.
உறுதுணையாக இருந்தார்கள்: அந்த சர்ச்சைகள் நடக்கும்போது தயாரிப்பாளர் ராஜலட்சுமியும் உறுதியாக என்னுடன் இருந்தார். என்னுடைய குரு அனல் அரசுதான் எனக்கு அனைத்தையுமே சொல்லிக்கொடுத்தார். ஜூலை நான்காம் தேதி படம் வெளியாகிறது. படம் பற்றி ரசிகர்களின் கருத்தை தெரிந்துகொள்வதற்கு ஆர்வமாக இருக்கிறேன்" என்றார். விஜய் சேதுபதியின் மகன் அறிமுகமாகும் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
அதேபோல் விஜய் சேதுபதியும் இந்த விழாவில் பேசுகையில், "சிந்துபாத் படத்தில் நடித்தபோது எனது மகனை விமான நிலையத்தில் தனியாக விட்டுவிட்டேன்.அப்போது அவனுக்கு 14 வயது இருக்கும். அந்த சமயத்தில் என்னிடம் வந்து அப்பா நான் இன்னும் வளரவில்லை. என்னை தனியாகவெல்லாம் விடாதே என்று சொன்னான். என் அப்பா என்னை அப்படித்தான் வளர்த்தார். நடிப்பை பொறுத்தவரை சூர்யா கதை கேட்டான் அவனுக்கு பிடித்துவிட்டது" என்றார்.
என்ன சர்ச்சை?: முன்னதாக இப்படத்துக்கு சம்பந்தப்பட்ட ஒருவிழாவில் கலந்துகொண்ட சூர்யா, 'தந்தையின் நிழலில் தான் வரவில்லை' என்கிற தொனியில் பேசியிருந்தார். அந்த சமயத்தில் சூர்யாவை பலரும், 'வயதுக்கு மீறி பேசுகிறார்' என்றெல்லாம் விமர்சனம் செய்ய தொடங்கியது என்பது நினைவுகூரத்தக்கது. அதுகுறித்துதான் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விளக்கமாக பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











