»   »  கௌரவக் கொலை பற்றி திடுக் தகவல்களுடன் வரும் படம் பரஞ்சோதி

கௌரவக் கொலை பற்றி திடுக் தகவல்களுடன் வரும் படம் பரஞ்சோதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நடக்கும் கௌரவக் கொலைகள் பற்றி பேசும் படம் தான் பரஞ்சோதி.

ஐபிஎல் சினிமாஸ் தயாரித்துள்ள படம் பரஞ்சோதி. கோபு பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தில் சாரதி, திருஷ்யம் படப் புகழ் அன்சிபா ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். படத்தில் விஜயகுமார், கஞ்சா கருப்பு, மயில்சாமி, சிங்கமுத்து, கீதா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பரஞ்சோதி படத்திற்கு முரளி இசையமைத்துள்ளார்.

கௌரவக் கொலை

கௌரவக் கொலை

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கௌரவக் கொலை நடந்து வருகிறது. அதில் பலவற்றின் பின்னால் சாதி உள்ளது என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பிற கொலைகள்

பிற கொலைகள்

பிற காரணங்களுக்காக நடக்கும் கொலைகளும் கௌரவக் கொலைகள் என்று கூறப்படுகிறதாம். இது பற்றிய உண்மை நிலவரத்தை புட்டு புட்டு வைக்க வருகிறது பரஞ்சோதி.

உண்மை

உண்மை

1990களில் நடந்த ஒரு கௌரவக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் பரஞ்சோதி.

பரபரப்பு

பரபரப்பு

படத்தில் கௌரவக் கொலைகள் பற்றிய உண்மை தெரிவிக்கப்பட்டுள்ளதாம். படம் ரிலீஸான பிறகு அதைப் பற்றி தான் மக்கள் பரபரப்பாக பேசுவார்கள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர்.

English summary
Paranjothi movie will reveal the truth about honour killings in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil