இவ்வளவு வயது வித்தியாசத்தில் திருமணமா... திரையுலகை அதிரவைத்த நட்சத்திர தம்பதிகள் யாருன்னு தெரியுமா?
சென்னை: நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள் என திரையுலக பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வது வழக்கமான ஒன்றுதான்.
தமிழில் அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, பிரசன்னா - சினேகா என ஏராளமான நட்சத்திர ஜோடிகள் உள்ளனர்.
ஆனால், ஹாலிவுட்டைப் போல அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொண்ட பிரபலங்களும் உள்ளனர்.
அவர்களில் டாப் 5 திரை நட்சத்திரங்கள் யார் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

இவங்க தான் நம்பர் 1
காதல் என வந்துவிட்டால் சாதி, மதம், மொழி, இனம் மட்டுமில்லை, வயதும் வந்த வழி தெரியாமல் ஓடிவிடும். அப்படி தான் 27 வயது வித்தியாசம் இருந்தும் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் வேறு யாரும் இல்லை, நடிகை குட்டி ராதிகாவும் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் தான். தமிழில் எஸ்பி ஜனநாதன் இயக்கிய இயற்கை திரைப்படத்தில் ஷாம் ஜோடியாக நடித்திருந்தார் குட்டி ராதிகா. ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்த குட்டி ராதிகா, தன்னைவிட 27 வயது அதிகமுடைய கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்துகொண்டார். அப்போது இவருக்கு வெறும் 20 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஆர்யா - சாயிஷா ஜோடிக்கு இரண்டாவது இடம்
இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஆர்யா - சாயிஷா தம்பதியினர் என சொல்லலாம். அறிந்தும் அறியாமலும் திரைப்படம் மூலம் அறிமுகமான ஆர்யா, தனது வெரைட்டியான நடிப்பால் அசத்தி வருகிறார். இவர் நயன்தாராவை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இல்லாமல் போனது. அதன் பின்னர் காப்பான், டெடி படங்களில் உடன் நடித்த சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் 17 வயது வித்தியாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இந்த ஜோடிக்கு பெண் குழந்தையும் பிறந்தது.

சினேகன் - கன்னிகா ஜோடிக்கு மூன்றாவது இடம்
தமிழில் ஏராளமான பாடல்களை எழுதியுள்ள சினேகன், சில படங்களில் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். 8 வருடங்களாக நடிகை கன்னிகாவை காதலித்து வந்த சினேகன், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை திருமணம் செய்துகொண்டார். கன்னிகாவை விட சினேகன் 16 வயது அதிகம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடி
தமிழில் சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி தம்பதியினரைப் போல மலையாள ரசிகர்களுக்கு ஃபஹத் பாசில் - நஸ்ரியா நசீம் ஜோடி ரொம்பவே ஃபேவரைட் எனலாம். ஹீரோவாக அறிமுகமான போது அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட ஃபஹத் பாசில், இன்று நடிப்பு ராட்சசனாக வலம் வருகிறார். அதேபோல் நஸ்ரியா நசீம் தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை வளைத்துப் போட்டார். ஃபஹத் - நஸ்ரியா இருவருக்கும் 12 வயது வித்தியாசம் இருந்தாலும், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

சீனியர் ஜோடி போனி கபூர் - ஸ்ரீதேவி
80களில் கோலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ரஜினி, கமல் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக ஒரு ரவுண்டு வந்த ஸ்ரீதேவி, பாலிவுட்டிலும் கொடிகட்டி பறந்தார். கொள்ளையழகுடன் தேவதையாக வலம் வந்த இவரை திருமணம் செய்துகொள்ள, நடிகர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் போட்டிப் போட்டனர். ஆனால் இவரோ தன்னைவிட எட்டு வயது அதிகமுடைய போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். போனி கபூர் ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த நிலையில், அவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











