வாவ்...செம...கமலின் விக்ரம் பட ரிலீஸ் தேதியும் வந்தாச்சு...உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னை : அஜித், சூர்யா, விஜய்யை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதியும் கிட்டதட்ட முடிவாகி விட்டதாம். விக்ரம் ரிலீஸ் தேதி பற்றிய தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

1960 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல் தலைவர், டிவி பிரபலம் என பன்முக திறமைகளை கொண்டிருப்பவர் கமல்ஹாசன். இதுவரை 230 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தற்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

தள்ளிப்போன விக்ரம் ஷுட்டிங்

தள்ளிப்போன விக்ரம் ஷுட்டிங்

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவாணி நாராயணன், சந்தான பாரதி, மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கி நடந்து வருகிறது. கமலுக்கு கொரோனா பாதிப்பு, சென்னை போலீஸ் மியூசியத்தில் ஷுட்டிங் நடத்த அனுமதி கிடைக்காமல் போனது உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ஷுட்டிங் தள்ளிப்போனது.

ஏப்ரலில் விக்ரம் ரிலீஸ்

ஏப்ரலில் விக்ரம் ரிலீஸ்

கமல் குணமாகி வந்த பிறகு மீண்டும் ஷுட்டிங் துவங்கப்பட்டு, விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட ஷுட்டிங் சமீபத்தில் நடைபெற்றதாக கூறி அதன் போட்டோக்கள் வெளியாகி டிரெண்டிங் ஆகின. ரசிகர்களை கோடை விடுமுறையில் மகிழ்விப்பதற்காக ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 14 ம் தேதி பீஸ்ட் ரிலீசாகும் என கூறப்படுவதால் ஏப்ரல் 29 ல் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2

பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2

கடைசியாக 2018 ம் ஆண்டு வெளிவந்த விஸ்வரூபம் 2 தான் கமல் நடித்து வெளி வந்த படம். அதற்கு பிறகு பிக்பாஸ், அரசியல் என கமல் பிஸியாக இருந்தார். இருந்தாலும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, அதில் நடித்து வந்தார். 2019 ல் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததால் ஷுட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பிஸியான கமல், ஷங்கர்

பிஸியான கமல், ஷங்கர்

அதைத் தொடர்ந்து கொரோனா, லாக்டவுன், லைகா தொடர்ந்த வழக்கு போன்ற பல காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு முடங்கி கிடக்கிறது. மீண்டும் எப்போது இந்தியன் 2 ஷுட்டிங்கை துவக்குவார்கள் என தெரியாததால் கமல், விக்ரம் படத்தில் கமிட் ஆகி, பிஸியாக நடிக்க துவங்கி விட்டார். டைரக்டர் ஷங்கரும் ஆர்சி 16 படத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.

3 ஆண்டுகளுக்கு பின் கமல் படம்

3 ஆண்டுகளுக்கு பின் கமல் படம்

விக்ரம் ஷுட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கமல் நடித்து வெளிவர உள்ள படம் என்பதால் விக்ரம் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். விக்ரம் படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களின் வேலைகளை துவக்கவும் கமல் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X