ரவுடி பேபி பாட்டுக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆடி பார்த்திருக்கிறீர்களா?
சென்னை: ரவுடி பேபி பாடலுக்கு எம்.ஜி.ஆர். நடனமாடினால் எப்படி இருக்கும் என்று பாருங்கள்.
மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அந்த பாடலை பாடி, ஆடினார்கள்.
அந்த பாடலுக்கு தனுஷ், சாய் பல்லவி ஆகியோர் பிரபுதேவா சொல்லிக் கொடுத்த ஸ்டெப்ஸை போட்டு தானே பார்த்திருக்கிறீர்கள், நம்ம எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆடிப் பார்த்திருக்கிறீர்களா.

ஒரு குசும்புக்காரர், ஆனால் கற்பனை திறன் வாய்ந்தவர் ஜெயலலிதாவையே ரவுடி பேபியாக்கிவிட்டார். நீங்களே அந்த வீடியோவை பார்த்து ரசியுங்கள்.
முன்னதாக சூர்யாவின் காதல் வந்தாலே பாடலுக்கு சிவாஜி கணேசன் வெர்ஷன் போட்டு அசத்தினார்கள். அடடா, அடடா, தலைவர் என்ன ஆட்டம் ஆடினார். சும்மா சொல்லக் கூடாது சிவாஜியின் ஸ்டெப்ஸ் அந்த பாடலுக்கு அப்படி அம்சமாக இருந்தது.
பிரேமம் படம் வெளியானதில் இருந்து சாய் பல்லவியை மலர் டீச்சர் என்று அழைத்து வந்த ரசிகர்கள் தற்போது ரவுடி பேபி என்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது.


Click it and Unblock the Notifications











