Captain Miller - எங்கள்கிட்டதான் எல்லா கெட்ட பழக்கமும் இருக்கே பாஸ்.. அருண் மாதேஸ்வரன் ஓபன் டாக்
சென்னை: கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினர். அந்தவகையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் அவரது பேச்சு ரசிக்கும்படி இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்திருக்கின்றன.
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக வாத்தி படத்தில் நடித்தார். திருச்சிற்றம்பலம் படம் கொடுத்த ஹிட் வைபை வாத்தி படத்தில் தவறவிட்டிருந்தார். குறிப்பாக இயக்குநர் தெலுங்கு இயக்குநர் என்பதால் இது தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்று கேள்வி எழும் அளவுக்கு இயக்கியிருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது.

கேப்டன் மில்லர்: இதனையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய இரண்டு படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தற்போதைய இளம் இயக்குநர்களில் முக்கியமானவராக அருண் கவனம் ஈர்த்ததால் இப்படம் மீது தனுஷ் ரசிகர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
என்ன கதை?: இந்தப் படத்தில் தனுஷ் போராளியாக நடித்திருக்கிறார். குறிப்பாக இப்படமானது ஈழ பிரச்னையை சுற்றி நடக்கும்படி திரைக்கதையை அருண் மாதேஸ்வரன் நகர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனி தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்று ஒருவர் இருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. அதனால் இப்படம் ஈழ பிரச்னையை பேசும் என திரைத்துறையில் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
இரண்டு பாகங்கள்: இந்தப் படமானது இரண்டு பாகங்களாக வெளியாகலாம் என்றும் கருதப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தாலும் அருண் மாதேஸ்வரனுடன் தனுஷ் மீண்டும் இணைந்திருக்கிறார். அதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. எனவே மீண்டும் அருணுடன் தனுஷ் இணையும் படம் கேப்டன் மில்லர் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என கருதப்படுகிறது.
ஆடியோ லான்ச்: இந்நிலையில் படமானது பொங்கல் தினத்தையொட்டி ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அந்தவகையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசுகையில், "தனுஷை பார்க்கும்போது அவருக்குள் என்னை பார்ப்பது போன்றே இருக்கும்.
தேவதாஸ்: 2011ஆம் ஆண்டு தேவதாஸ் என்ற கதையை நான் எழுதினேன். அதற்கு தனுஷ்தான் சரியாக இருப்பார் என்று கருதி அவரை அப்ரோச் செய்ய நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அடுத்ததாக ராக்கி படத்தின் கதையை நான் எழுதும்போதும் தனுஷை மைண்டில் வைத்துதான் எழுதினேன். ஆனால் அவரை அப்போதும் ரீச் செய்ய முடியவில்லை. ஒருவழியாக கேப்டன் மில்லரில் அவரை பிடித்துவிட்டேன். கேப்டன் மில்லர் கதையை நான் சொன்னபோது ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. அப்போதே அவர் என்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார்.
சிவராஜ்குமார் கேரக்டர்: இந்தப் படத்தில் சிவராஜ்குமார் கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் இருந்தேன். இவருக்கு முன்னதாகவே நான் இரண்டு, மூன்று பேரை யோசித்து வைத்திருந்தேன். அந்த சமயத்தில் மஃப்டி படத்தின் டீசரை எனது உதவி இயக்குநர் காண்பித்தார். உடனே சிவராஜ்குமாரை ஃபிக்ஸ் செய்துவிட்டோம்.
அவரிடம் கதை சொல்ல சென்றபோது நான் தனுஷின் ரசிகன். கண்டிப்பாக நடிக்கிறேன் என சொன்னார். அவர் கன்னடத்தில் பெரிய சூப்பர் ஸ்டார். அவரை சரியாக ஹேண்டில் செய்ய வேண்டும் என்ற பதற்றம் இருந்தது. படத்தில் அவர் நடித்த முதல் காட்சியில் குதிரையில் ஏறி வரவேண்டும். அவரும் ஒழுங்காக வந்துவிட்டார். ஆனால் கடைசியில் விழுந்துவிட்டார். உடனே எனக்கு பதற்றமாகிவிட்டது. அவரோ அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு அடுத்த ஷாட்டுக்கு சென்றுவிட்டார்.
ஒருகட்டத்தில் அவர் எங்களை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். அதாவது என்னிடமும், உதவி இயக்குநர்களிடமும் யார் யாருக்கு எல்லாம் கெட்ட பழக்கம் இருக்கிறது என்று கேட்டார். நாங்களோ எங்களுக்குத்தான் எல்லா கெட்ட பழக்கமும் இருக்கிறதே என்று சொன்னோம். இப்படி ஜாலியாக இருந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











