Chandramukhi 2 Review - லாரன்ஸுக்குள் பாலகிருஷ்ணா ஆவி.. சந்திரமுகி 2வை சம்பவம் செய்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Blue Sattai Maran Chandramukhi 2 Review (ப்ளூ சட்டை மாறனின் சந்திரமுகி 2 விமர்சனம்) சந்திரமுகி 2 படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்திருக்கும் விமர்சனம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இன்றுவரை ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக்பஸ்டர்களில் அதுவும் ஒன்று. இந்த சூழலில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு உருவாக்க்கியிருக்கிறார்.

Here is the Blue Sattai Marans Chandramukhi 2 Movie Review

சந்திரமுகி 2: பி.வாசு இயக்கியிருக்கும் சந்திரமுகி 2வில் லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்போடு படம் நேற்று வெளியானது. முதல் பாகம் போல் இந்த பாகம் இருக்குமா என்ற கேள்வியுடன் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர்.

ஏமாற்றம்தான்: ஆனால் சந்திரமுகி 2 அவர்களை திருப்திப்படுத்தவில்லை. படத்துக்கு ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் கடுமையான நெகட்டிவ் விமர்சனத்தை கொடுக்கின்றனர். அதிலும் லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்திற்கும்; கங்கனா ரணாவத் சந்திரமுகி கதாபாத்திரத்துக்கும் சுத்தமாக செட் ஆகவில்லை. சண்டை காட்சிகளில் எல்லாம் தெலுங்கு பட வாடை அடிக்கிறது. வடிவேலுவின் காமெடிக்கு சிரிப்பே வரவில்லை என்று சகட்டுமேனிக்கு விமர்சிக்கின்றனர் ரசிகர்கள்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சந்திரமுகி 2 படத்துக்கு தன்னுடைய விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் விமர்சனத்தில், "சந்திரமுகி படத்தின் முதல் பாக கதையை பட்டி டிங்கரிங் பார்த்து நம் தலையில் கட்டியிருக்கிறார்கள். அந்த சாயல் தெரியக்கூடாது என்று வேலை செய்திருக்கிறார்கள். ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்னு சொல்லி படம் பண்ணியிருக்கிறார்கள். படத்தின் குவாலிட்டியை இம்ப்ரூவ் செய்யுற மாதிரி ஒன்னுமே இல்லை. காலி செய்யுற மாதிரிதான் இருக்கு.

Here is the Blue Sattai Marans Chandramukhi 2 Movie Review

ஹீரோவே பிரச்னை: இந்தப் படத்தில் பிரச்னையே ஹீரோதான். லாரன்ஸிடமிருந்து ரஜினியின் சாயலை எடுப்பதற்கே படாத பாடு பட்டதாக பி.வாசு கூறியிருந்தார். ரஜினியின் சாயலை எடுத்துவிட்டு பாலகிருஷ்ணாவின் ஆவியை லாரன்ஸுக்குள் புகுத்தியிருக்கிறார் இயக்குநர். ஹீரோவின் அறிமுக சண்டை காட்சியில் பாலகிருஷ்ணாவின் மெத்தடில் இறங்கிவிட்டார். தியேட்டரில் இருந்தவர்கள் அதை பார்த்துவிட்டு கைத்தட்டி சிரித்துவிட்டார்கள். அந்த மாதிரி ஒரு காமெடி. கலாய்க்கக்கூட இந்தப் படம் தகுதி இல்லை.

திசை பக்கமே போகாதீங்க: வேட்டையன் கேரக்டரை வேட்டையனாகவும், செங்கோட்டையனாகவும் பிரித்து குழப்பி வைத்திருக்கிறார்கள். சந்திரமுகி 1 வெற்றிக்கு முக்கிய காரணம் ஜோதிகாவின் நடிப்பு. ஆனால் இதில் கங்கனா ரணாவத் என்ற பாட்டியை கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். பின்னணி இசையும் சரி பாடலும் சரி சுத்தமாக நன்றாக இல்லை. இந்தப் படத்தில் தெற்கு திசை பக்கம் போயிடாதீங்கனு சொல்லிட்டே இருப்பாங்க. நாங்க என்ன சொல்றோம்னாஇந்தப் படம் ஓடும் தியேட்டர் இருக்கும் திசை பக்கமே நீங்க போயிடாதீங்க" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X