Fight Club - ஃபைட் கிளப்.. கஞ்சா அடிச்சிட்டு படம் எடுத்தாங்கபோல.. ஒரே புகை மண்டலம்.. ப்ளூ சட்டை விமர்சனம்

சென்னை: Fight Club Blue Sattai Maran Review (ஃபைட் கிளப் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்) பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் ஃபைட் கிளப் படத்தை வைத்து செய்துவிட்டார்.

உறியடி படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் விஜய்குமார். அந்தப் படத்தை அவரே சொந்தமாக தயாரித்து புதுமுகங்களை வைத்து இயக்கிய அந்தப் படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது. நான்கு கல்லூரி மாணவர்கள் சாதிக்கு எதிராக களமாடுவதையும் அதனால் அவர்கள் சந்திக்கும் விளைவுகளையும் பற்றி படம் பேசியிருந்தது.

Here is the Blue Sattai Marans Fight Club Movie Review

சூப்பர் ரெஸ்பான்ஸ்: எதிர்பார்ப்பு இல்லாமல்தான் ரசிகர்கள் படத்துக்கு போனார்கள். ஆனால் படம் மிகப்பெரிய திருப்தியை கொடுத்தது. குறிப்பாக தாபாவில் நடக்கும் இடைவேளை சண்டை காட்சி பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்தது. படம் மெகா ஹிட்டானது. வசனம், காட்சியமைப்பு என அனைத்திலும் விஜய்குமார் புகுந்து விளையாடியிருந்தார். அதனையடுத்து அவர் நடித்த உறியடி 2 படம் படுதோல்வியடைந்தது.

வசனகர்த்தா: உறியடி மற்றும் அதன் இரண்டாம் பாகத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து மெகா ஹிட்டான சூரரை போற்று படத்துக்கு வசனம் எழுதினார். வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா போன்ற வசனங்கள் படத்தில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து அவருக்கு இன்னொரு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.

தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ்: சூழல் இப்படி இருக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். முதல் படமாக அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் ஃபைட் கிளப் படத்தை தயாரித்திருக்கிறார். இதில் விஜய்குமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். படமானது நேற்று திரையரங்குகளில் வெளியானது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: உறியடி விஜய்குமார் நடித்திருப்பதாலும் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு என்பதாலும் நல்ல எதிர்பார்ப்புடன் படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். ஆனால் படம் அவர்களை திருப்திப்படுத்தவில்லை. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது யூட்யூப் சேனலில் ஃபைட் கிளப் படத்தின் விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.

Here is the Blue Sattai Marans Fight Club Movie Review

அந்த விமர்சனத்தில் அவர், "படத்தின் ஆரம்பம் எல்லாம் நன்றாக இருந்தது. ஹீரோயின் கேரக்டர் நன்றாக இருந்தது. ஆனால் படம் ஆரம்பித்து 25 நிமிடங்களுக்குள் அந்த கேரக்டரை காணவில்லை. அதற்கு பிறகு படத்தில் எங்கும் வரவில்லை. அதோட அந்த கேரக்டரும் முடிந்துவிட்டது படமும் முடிந்துவிட்டது. படத்துக்கு பெயர் ஃபைட் கிளப்.

எனவே படத்தில் சண்டை போடுவார்கள் என்று பார்த்தால் படம் முழுக்க ஒருத்தரை ஒருத்தர் விரட்டிக்கொண்டே இருக்கிறார்கள். உருப்படியா ஒரு சண்டையும் இல்லை.இந்தப் படத்துக்கு ஃபைட் கிளப் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக கஞ்சா கிளப் என்று வைத்திருக்கலாம். ஏனெனில் படத்தில் கஞ்சா விற்கிறார்கள். கஞ்சா அடிக்கிறார்கள். ஒருவேளை படத்தை எடுத்தவர்கள் கஞ்சா அடித்துவிட்டு எடுத்தார்களா தெரியவில்லை. தியேட்டர் முழுக்க ஒரே புகை மண்டலமாக இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X