Salaar Review - வெத்து பில்ட் அப்தான்.. படு கன்றாவியா இருக்கு.. சலார் படத்தை சம்பவம் செய்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: Salaar Blue Sattai Maran Review (சலார் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்) பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சலார் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துவரும் சூழலில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.
கேஜிஎஃப் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரசாந்த் நீல். கன்னட திரையுலகம் இந்திய அளவில் அடையாளம் இருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் கேஜிஎஃப் படம் வந்த பிறகு அது மிகப்பெரிய புகழை அடைந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் பட்டையை கிளப்பியது. குறிப்பாக பல வருடங்கள் வெற்றிக்காக உழைத்துக்கொண்டிருந்த நடிகர் யஷ்ஷுக்கு அந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.

கேஜிஎஃப் இரண்டாம் பாகம்: முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கினார் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் 1ன் வெற்றியைவிட பன்மடங்கு வெற்றி பெற்றது கேஜிஎஃப் 2. இப்படிப்பட்ட சூழலில் ரெபல் ஸ்டார் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்டோரை வைத்து சலார் படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் நீல்.
அவசியமான படம்: பாகுபலி படத்தால் பான் இந்தியா ஹீரோவாக அறியப்பட்ட பிரபாஸ் அதற்கு பிறகு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி படங்களில் நடிக்கவிலலி. சலாருக்கு முன்னதாக வெளியான ஆதி புருஷ் படமெல்லாம் கடுமையான ட்ரோலை சந்தித்தது. எனவே சலார் படத்தின் வெற்றியை அவரும் அவரது ரசிகர்களும் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி இருக்கு படம்: நேற்று படம் வெளியானது. பிரசாந்த் நீலுடன் முதன்முறையாக் பிரபாஸ் இணைந்திருப்பதால் உச்சக்கட்ட ஆர்வத்தோடு ரசிகர்கள் தியேட்டருக்கு சென்றனர். ஆந்திரா, தெலங்கானாவில் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ அவ்வளவான ஆதரவு இல்லை. அப்படியே கேஜிஎஃப் ஸ்டைலிலேயே படம் இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
ஓவர் டோஸ்: முக்கியமாக ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் ஓவர் டோஸாக இருக்கின்றன. படத்தில் எந்த சீனிலும் லாஜிக் இல்லை. க்ளைமேக்ஸில் அந்த ஜாம்பி சண்டைகள் எல்லாம் எதற்கு வைத்தார்கள் என்றே தெரியவில்லை என சகட்டுமேனிக்கு விளாசுகின்றனர். ஆகமொத்தம் இந்தப் படம் பிரபாஸுக்கு தரமான கம்பேக் என்றெல்லாம் சொல்லமுடியாது என்றும் தமிழ்நாட்டு ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சலார் படத்தின் விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ""கேஜிஎஃப் படம் போன்றே எடுக்க வேண்டும் என திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள் என்பது படத்தை பார்க்கையில் தெரிகிறது. ஆனால் அந்தப் படத்துக்கு ஈடாக எல்லாம் இந்தப் படத்தை வைக்க முடியாது.
வெத்து பில்ட் அப்: படத்தின் முதல் பாதி முழுவதும் ஹீரோ பற்றிய பில்ட் அப்பே இருக்கிறது. ஆனால் அதெல்லாம் வெத்து பில்ட் அப்புகளாகவே இருக்கின்றன. படு கன்றாவியாக இருக்கிறது. பிரபாஸ், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் எல்லாம் படத்தில் ஒன்றவும் இல்லை; நடிக்கவும் இல்லை. நடிக்க தெரிந்த ஒரே ஆளான பிருத்விராஜுக்கோ படத்தில் வேலையே இல்லை.
கோடாரி சண்டை: எதிரிகள் எல்லாம் மிலிட்டரி டேங்கர், மெஷின் கன் ஆகியவைகளை வைத்து சண்டை போடுகிறார்கள். ஆனால் ஹீரோவோ கோடாரியை வைத்து அவர்களுடன் சண்டை போடுகிறார். கேஜிஎஃப் படத்தில் பிலட் அப்புகள் இருந்தாலும் அதனையொட்டி வரும் சீன்கள் எல்லாம் அருமையாக இருந்தன. ஆனால் இதில் அப்படி ஒன்றுகூட இல்லை. படத்தையும் இரண்டு மணி நேரம் 55 நிமிடங்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை பார்த்தால் வாழ்க்கையில் மூன்று மணி நேரம் வீண்தான்"" என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











