Chandramukhi 2 Box Office-சந்திரமுகி 2..முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?..இதோ முழு விவரம்
சென்னை: Chandramukhi 2 Box Office (சந்திரமுகி 2 பாக்ஸ் ஆபிஸ்) சந்திரமுகி 2 படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினி நடித்த சந்திரமுகி படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியானது. பாபா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதில் ரஜினியுடன் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த சூழலில் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கியிருக்கிறார் பி.வாசு.

சந்திரமுகி 2: லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸும், சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும் நடித்திருக்கின்றனர். இவர்கள் தவிர படத்தில் ராதிகா, வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மெகா ஹிட்டடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.
நெகட்டிவ் விமர்சனம்: நேற்று வெளியான படத்தை பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்றனர் ரசிகர்கள். ஆனால் படம் தங்களை திருப்திப்படுத்த தவறிவிட்டதாக பெரும்பாலானோர் நெகட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். மேலும் என்னது இது பேய் படமா என்ன வாசு சார் இதெல்லாம் என்று ட்ரோல் செய்யவும் ஆரம்பிக்கின்றனர்.
சுத்தமா செட் ஆகல: சந்திரமுகி முதல் படத்தின் பலமே ஜோதிகா ஏற்றிருந்த சந்திரமுகி கதாபாத்திரம் மற்றும் ரஜினிகாந்த் ஏற்றிருந்த வேட்டையன் கதாபாத்திரம். ஆனால் இரண்டாம் பாகத்தில் அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் பயங்கரமாக வாசு சொதப்பியிருக்கிறார் என்று கூறுகின்றனர் ரசிகர்கள். அதிலும் வேட்டையன் கதாபாத்திரத்தில் லாரன்ஸை பார்க்கவே முடியவில்லை என்றும் ஓபனாக பேச ஆரம்பித்திருக்கின்றனர். லாரன்ஸின் நிலைமைதான் கங்கனா ரணாவத்துக்கும்.

தமிழ் படமா தெலுங்கு படமா?: மேலும் சில ரசிகர்கள், சந்திரமுகி முதல் பாகத்திலேயே சண்டை காட்சியில் கொஞ்சம் ஓவர் பில்டப் இருக்கும். இருந்தாலும் அது ரஜினி என்ற பிம்பத்தால் வெளியே தெரியாமல் போனது. ஆனால் இந்தப் படத்தில் லாரன்ஸின் ஓபனிங் சண்டைக்காட்சி எல்லாம் பார்க்கும்போது தெலுங்கு படமே பரவாயில்லை என்று தோன்றுவதாகவும் ரசிகர்கள் விமர்சன அம்புகளை வீசிக்கொண்டிருக்கின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ்: இப்படி விமர்சன ரீதியாக கடுமையான ட்ரோல்களை சந்தித்துவரும் சந்திரமுகி 2 படத்தின் முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்திய அளவில் இந்தப் படம் முதல் நாளில் 7.5 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது எனவும் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. அடுத்த மூன்று நாட்களும் விடுமுறை என்பதால் ஓரளவு டீசண்ட்டான வசூலை இந்தப் படம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











