twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுதாண்டா உண்மையான கலெக்ஷன்!!

    By Shankar
    |

    இதுதாண்டா உண்மையான பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் என வாய்விட்டு சொல்ல வைக்கும் அளவுக்கு ஒரு படம் அபாரமாக வசூலித்துள்ளது.

    இத்தனைக்கும் அந்தப் படம் தமிழ்ப் படமல்ல. வெளியான ஒரு வாரத்தில் ரூ 100 கோடி, அடுத்தவாரம் ரூ 200 கோடி என பொய் சொல்லவில்லை. தியேட்டருக்கு ஆள்பிடிக்க வாரத்துக்கு ஒரு சர்ச்சையைக் கிளப்பவில்லை.

    தமிழகத்தில் மட்டுமே வெளியான ஒருபடத்துக்கு தனது மார்க்கெட் மதிப்பைக் கூட சரியாகத் தெரிந்து கொள்ளாமல் ரூ 180 கோடி வசூல் என அடித்துவிடவில்லை.

    அட, இந்தப் படம் தொடர்பான யாருமே இந்த வசூல் விவரத்தைச் சொல்லவில்லை. ஒரிஜினல் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் இது... படத்தின் பெயர் லைஃப் ஆப் பை. இந்தியாவில் மட்டும் இந்தப் படம் வசூலித்துள்ள தொகை ரூ 98 கோடி!!

    நவம்பர் இறுதியில் வெளியாகி, சமீபத்தில் ஆஸ்கர் விருது பெற்ற இந்தப் படம் சத்தமின்றி இன்னும் கூட தமிழகத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர்களில் மட்டும் ரூ 7.9 கோடியை வசூலித்துள்ளது இந்தப் படம்.

    ஆங்லீயின் இயக்கத்தில், பெருமளவு புதுச்சேரியில் படமாக்கப்பட்ட லைஃப் ஆப் பை-யின் முதல் பிரிமியர் காட்சி நடந்ததே சென்னையில்தான். ஆங் லீ-க்கு இந்தியா மீது அபார நம்பிக்கை. ப்ரிமியரின்போதே அவர் சொன்னார், 'இந்தப் படம் மற்ற நாடுகளில் எப்படிப் போகிறதோ.. ஆனால் இந்தியாவில் என்னைப் பெருமைப்படுத்தும் அளவுக்குப் போகும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்று.

    அது தன் படைப்பு மீது அவருக்கிருந்த நம்பிக்கை. இந்த மண்ணிலேயே ஒரு ஹாலிவுட் படத்தை முழுமையாக உருவாக்கிய அவருக்கு இந்திய ரசிகர்கள் கொடுத்த மிகச் சிறந்த பரிசுதான் இந்த அபார வசூல்.

    நல்ல சரக்கோடு வரும் யாரும்.. எந்த நாட்டிலிருந்து வந்தாலும்... ரசிகர்கள் கைகொடுத்துக் காப்பார்கள் என்பதற்கு லைப் ஆப் பை ஒரு சிறந்த உதாரணம்!

    English summary
    Aang Lee's Hollywood flick Life of Pi has collected a whopping Rs 98 cr in India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X