Bigg Boss 7 House - பிக்பாஸ் வீடு.. இரண்டு வீடுகள் ஒரு வாசல்.. வீடு எப்படி இருக்கு தெரியுமா?
சென்னை: Bigg Boss House (பிக்பாஸ் வீடு) பிக்பாஸ் ஏழாவது சீசன் கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் இரண்டு வீடுகளில் நடக்கவிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் வெகு பிரபலமாகியிருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த ஆறு சீசன்களுக்கும் மக்கள் பெரும் வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். கடந்த சீசனில் அசீம் டைட்டில் வின்னரானார். விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் ஏழாவது சீசன் குறித்து மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

பிக்பாஸ் 7: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கிறது. இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியானது. எப்போதும் ஒரு வீட்டில் நடக்கும் பிக்பாஸ் இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கப்போகிறது. இரண்டு வீடுகளில் பிக்பாஸ் போட்டி எப்படி நடைபெறும்; ஏதேனும் ரூல்ஸ் மாறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
தொடங்கிய பிக்பாஸ்: மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று கோலாகலமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கமல் ஹாசன் தனது வீட்டிலிருந்து பிக்பாஸ் செட்டுக்கு காரில் சென்றார். சிகப்பு கலர் கோட் சூட்டில் படு கலக்கலாக கமல் ஹாசன் பிக்பாஸ் செட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார். அத அந்த சமயத்தில் ரசிகர்களை கவரும்படியான ஒரு ஸ்க்ரிப்ட்டை பிக்பாஸ் குழுவினர் செய்திருந்தனர்.
இரண்டு வீடுகள்: அதாவது பிக்பாஸ் 7 தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த சீசன் இரண்டு வீடுகளில் நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அது எப்படி இரண்டு வீடுகளில் நடக்கும் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். அதனை ரசிகர்களுக்கு விளக்கும் விதமாக பிக்பாஸ் வீட்டுக்குள் இன்னொரு கமல் ஹாசன் தோன்றி தொகுத்து வழங்கும் கமலிடம் இரண்டு வீடுகள் குறித்து பேசியபடி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இரண்டு வீடுகள் ஒரே வாசல்: அதன்படி பிக்பாஸ் இரண்டு வீடுகளும் ஒரே இடத்தில் பக்கத்து பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு வீடுகளுக்கும் ஒரே வாசல்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கன்ஃபெஷன் ரூம்கள் இரண்டு வீடுகளுக்கும் தனித்தனியாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. பாத்ரூம்கள் ஒரு வீட்டில் மட்டும் வைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் கிச்சனும் ஒன்றுதான் அமைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு பாஸ்கள்: ஜெயிலும் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஜெயில் பழங்கால ஜெயில் போல் சங்கிலியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே ஜெயில் தண்டனை பெறுபவர்கள் சங்கிலியால் கட்டப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒரு வீட்டில் பெரிய பாஸ் என்றும் இன்னொரு வீட்டில் சின்ன பாஸ் என்றும் கமல் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











