twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறந்த நடிகர் ரன்வீர் சிங், சிறந்த நடிகை க்ரித்தி சனோன்: 67வது பிலிம்ஃபேர் விருது பட்டியல் இதோ

    |

    மும்பை: இந்தி திரைப்படங்களுக்கான 67வது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன.

    சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம் என பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

    67வது ஃபிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    Cobra Review: மண்டையை போட்டுக் குழப்பும் கணக்கு வாத்தியார்.. கோப்ரா விமர்சனம் இதோ! Cobra Review: மண்டையை போட்டுக் குழப்பும் கணக்கு வாத்தியார்.. கோப்ரா விமர்சனம் இதோ!

    67வது ஃபிலிம்பேர் விருதுகள்

    67வது ஃபிலிம்பேர் விருதுகள்

    இந்தி திரைப்படங்களுக்கான 67வது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த ஃபிலிம்பேர் விருது விழாவில், பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

    சிறந்த திரைப்படம்

    சிறந்த திரைப்படம்

    67வது ஃபிலிம்பேர் விருது விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பிரிவில் ஷெர்ஷா, சர்தார் உத்தம், ராஷ்மி ராக்கெட் ஆகிய படங்களுக்குள் கடும் போட்டி நிலவியது. இறுதியில், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடிப்பில் வெளியான 'ஷெர்ஷா' சிறந்த படமாக தேர்வானது. இந்தப் படத்தை தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த விமர்சனங்களை பெற்றதற்காக 'சர்தார் உத்தம்' படத்திற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

    சிறந்த இயக்குநர், கதை, திரைக்கதை

    சிறந்த இயக்குநர், கதை, திரைக்கதை

    சிறந்த இயக்குநர் விருதை 'ஷெர்ஷா' படத்திற்காக விஷ்ணுவர்தன் தட்டிச் சென்றார். சிறந்த கதை 'சண்டிகர் கரே ஆஷிகி' படத்திற்காக அபிஷேக் கபூர், சுப்ரதிக் ஷென், துஷார் பரஞ்சபே ஆகியோர் பெற்றனர். சிறந்த திரைக்கதை விருதை 'சர்தார் உத்தம்' படத்திற்காக, சுபேந்து பட்டாச்சார்யா, ரித்தேஷ் ஷா இருவரும் பெற்றனர். சிறந்த வசனத்துக்கான விருதை, ' சந்தீப் அவுர் பிங்கி ஃபரார்' படத்திற்காக, திபாகர் பானர்ஜி, வருண் குரோவர் ஆகியோர் பெற்றனர். அதேபோல், சிறந்த எடிட்டர் விருதை, 'ஷெர்ஷா' படத்திற்காக ஸ்ரீகர் பிரசாத் வென்றார்.

    சிறந்த நடிகர், சிறந்த நடிகை விருது

    சிறந்த நடிகர், சிறந்த நடிகை விருது

    விருது விழாவில் முக்கிய பிரிவுகளான சிறந்த நடிகர், நடிகை ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான விருதை '83' படத்தில் நடித்த ரன்வீர் சிங் வென்றார். 1983 உலகக்கோப்பையை பின்னணியாகக் கொண்டு உருவான 83 படத்தில், கபில்தேவ் பாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார் ரன்வீர் சிங். சிறந்த நடிகையாக 'மிமி' படத்தில் நடித்த க்ரித்தி சனோன் விருது வென்றார். சிறப்பு பிரிவில் சிறந்த நடிகராக சர்தார் உத்தம் படத்தில் நடித்த விக்கி கௌஷல், சிறந்த நடிகையாக 'ஷெர்னி' படத்தில் நடித்த 'வித்யா பாலன்' ஆகியோர் விருது வென்றனர்.

    சிறந்த துணை நடிகர், துணை நடிகை

    சிறந்த துணை நடிகர், துணை நடிகை

    சிறந்த துணை நடிகராக 'மிமி' படத்தில் நடித்த பங்கஜ் திரிபாதியும், சிறந்த துணை நடிகையாக அதே படத்தில் நடித்த சாய் தம்ஹங்கரும் பெற்றனர். சிறந்த பின்னணி இசைக்கான விருது 'சர்தார் உத்தம்' படத்திற்காக சாந்தனு மொய்த்ராவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இசைக்கான விருது 'ஷெர்ஷா' படத்திற்காக தனிஷ்க் பாக்சி, பி ப்ராக், ஜானி, ஜஸ்லீன் ராயல், ஜாவேத் - மொஹ்சின், விக்ரம் மாண்ட்ரோஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளருக்கான விருது சுபாஷ் கய்க்கு வழங்கப்பட்டது.

    English summary
    Here is the complete list of 67th Filmfare Awards winners
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X