Thalaivar 170 - தலைவர் 170 ஷூட்டிங் எங்கு நடக்குது தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் தகவல் இதோ
சென்னை: Thalaivar 170 (தலைவர் 170) ரஜினி நடித்துக்கொண்டிருக்கும் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு நிம்மதி கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படம்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன்பு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு அண்மையில் ஷூட்டிங்கும் தொடங்கியது. முதல் ஷெட்யூல் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. திருவனந்தபுரம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இந்தப் படம் கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக பிரமாண்டமாக வெளியாகும் என்று கூறியிருந்தார்.
யார் யார் படத்தில்: இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஷயன், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் வழக்கம்போல இசையமைக்கிறார். முதன்முறையாக ஃபகத் பாசில் ரஜினியுடன் இணைந்திருப்பதால் இருவரும் ஸ்க்ரீனில் எப்படி இருப்பார்கள் என்று ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.
தொடரும் ஷூட்டிங்: ஜெய் பீம் படத்தில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குநர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து என்ன மாதிரியான கருத்தை கூறவிருக்கிறார் என்ற கேள்வி பலமாகவே எழுந்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் தொடங்கிய ஷூட்டிங் அடுத்த பணகுடியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் இப்போது மும்முரமாக நடந்தது.
மும்பையில் இப்போது: இதற்கிடையே படத்தில் கமிட்டாகியிருக்கும் அமிதாப் பச்சன் சில நாட்களுக்கு முன்பு ஷூட்டிங்கில் இணைந்தார். அப்போது அவரும் ரஜினியும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது.இந்நிலையில் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது திருநெல்வேலியில் மும்முரமாக நடந்துவந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டதாம். தற்போது படக்குழு அடுத்த ஷெட்யூலுக்காக மும்பையில் முகாமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











