Actors Net Worth - அதிக சொத்து.. தமிழிலிருந்து யாரும் இல்லை.. டாப் 5ல் தெலுங்கு நடிகர்கள்தான்..

சென்னை: South Indian Actors Net Worth (தென்னிந்திய நடிகர்களின் சொத்து மதிப்பு) தென்னிந்தியாவில் அதிக சொத்து சேர்த்திருக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சினிமாவின் ஆரம்பக்கட்டத்தில் நடிகர்களுக்கு அளவான சம்பளமே கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. காலம் மாற மாற காட்சிகளும் மாறி ஹீரோக்களுக்கான சம்பளம் கோடிகளை தொட்டது. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கோடிகளில் புரள ஆரம்பித்தனர். அதிலும் ரஜினிகாந்த் ஜாக்கிசானுக்கு பிறகு ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெயர் வாங்கினார்.

Here is the details about actors who have Top Net Worth in South India

ஓவர்டேக் செய்த விஜய்: தற்போது விஜய்க்கு அதிக சம்பளம் கொடுப்பதாக பேசப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படத்துக்கு ஏஜிஎஸ் நிறுவனம் அவருக்கு 175 கோடி ரூபாய்வரை சம்பளமாக கொடுக்க தயாராக இருக்கிறதாம். அப்படி நடக்கும்பட்சத்தில் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெருமையை விஜய் பெறுவார். அதேபோல் அஜித்தும் தனது சம்பளத்தை நூறு கோடியை தாண்டி ஃபிக்ஸ் செய்துவிட்டார். தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு நடிகர்களில் பிரபாஸ் உள்ளிட்டோரும் சம்பளத்தில் நூறு கோடியை தாண்டியிருக்கிறார்கள்.

சொத்து மதிப்பு: இந்தச் சூழலில் தென்னிந்தியாவிலேயே அதிக சொத்து சேர்த்திருக்கும் நடிகர்களின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் முதல் ஐந்து இடங்களில் தமிழ் நடிகர் ஒருவர்கூட இல்லை என்று கூறப்படுவதுதான். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் தமிழில் இருக்கும்போது தெலுங்கு நடிகர்கள் அதிக சொத்து சேர்த்ததில் டாப் 5ல் இருப்பதற்கு காரணம் அவர்கள் தலைமுறை தலைமுறையாக தொழிலதிபர்களாகவும், சினிமாவிலும் இருந்துவருவதுதான் காரணம் என கூறப்படுகிறது. சரி யார் யாருக்கு எவ்வளவு சொத்து என்பதை பார்ப்போம்.

Here is the details about actors who have Top Net Worth in South India

நாகார்ஜுனா: இந்த லிஸ்ட்டில் நாகார்ஜுனாதான் முதலிடத்தில் இருக்கிறாராம். சம்பளமாக அவர் 20 கோடி ரூபாய் பெற்றாலும் பல தொழில்களை அவர் பல காலமாக செய்துவருகிறாராம். சினிமா ஸ்டூடியோ பார்ட்னர், மீடியா ஸ்கூல், தனியாக டிவி சேனல் போன்ற தொழில்களில் அவர் முதலீடு செய்திருப்பதால்தான் அவருக்கு பல கோடி ரூபாயில் சொத்தாம். அவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாயாம்.

Here is the details about actors who have Top Net Worth in South India

அடுத்தது யார் யார்?: அவருக்கு அடுத்தபடியாக தெலுங்கு நடிகர் வெங்கடேஷுக்கு 2,200 கோடி ரூபாயும், சிரஞ்சீவிக்கு 1,650 கோடி ரூபாயும், அவரது மகனான ராம்சரணுக்கு 1,370 கோடி ரூபாயும், ஜூனியர் என்.டி.ஆருக்கு 450 கோடி ரூபாயும் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. தமிழிலிருந்து விஜய் 445 கோடி ரூபாய் சொத்துடன் ஆறாவது இடத்தில் இருக்கிறாராம். அதேபோல் ரஜினிகாந்த் ஏழாவது இடத்திலும் (430 கோடி ரூபாய் சொத்து), கமல் ஹாச 10ஆவது இடத்திலும் (388 கோடி ரூபாய் சொத்து) இருக்கின்றனராம். அதேசமயம் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை என பலர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X