Thalaivar 170 - தலைவர் 170ல் அமிதாப் பச்சன் ரோல் இதுவா?.. வேற மாதிரி இருக்குமே.. முழு தகவல் உள்ளே

சென்னை: Thalaivar 170 (தலைவர் 170) தலைவர் 170ல் அமிதாப் பச்சனின் ரோல் என்னவென்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டாகியிருந்தது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை அந்தப் படம் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்காக ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் படத்தின் வெற்றி பெரும் உற்சாகத்தை கொடுத்ததாகவே கருதப்படுகிறது.

 Here is the details about Amitabh Bachchan Role in Thalaivar 170

தலைவர் 170: இதற்கிடையே ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ரஜினிகாந்த் தன்னுடைஅய் 170ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை லைகா தயாரிக்க ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். அடிப்படையில் பத்திரிகையாளரான ஞானவேல் தனது முதல் படத்திலேயே பெரும் கவனத்தை ஈர்த்தார்.

சமூக கருத்து: குறிப்பாக இந்த சமூகம் பேச மறந்த இருளர் இன மக்களின் வலியையும்; அவர்களிடம் அதிகாரம் படைத்த காவல் துறை செய்த அத்துமீறலையும் எந்தவித சமரசமுமின்றி பேசியிருந்தார். மேலும் அந்தப் படத்தால் தமிழ்நாடு அரசின் கவனமும் இருளர் இன மக்களின் மீது திரும்பியது. எனவே அப்படிப்பட்ட இயக்குநர் ரஜினியை வைத்து படம் இயக்குவதால் பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

நடிகர்கள் லிஸ்ட்: இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பல வருடங்கள் கழித்து அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கில் அமிதாப் கலந்துகொண்டபோது அவருடன் ரஜினி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

இதுதான் ரோலா?: இந்த சூழலில் அவரும் ரஜினிகாந்த்தும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில் தலைவர் 170ல் அமிதாப் பச்சனின் ரோல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் சீனியர் வக்கீலாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலி என்கவுன்ட்டருக்கு எதிராக குரல் கொடுப்பவராக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. தற்போது அமிதாப் வக்கீலாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியிருப்பதால் கண்டிப்பாக இந்தப் படத்தில் கோர்ட் சீன்கள் அதிகம் இருக்குமோ என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். படத்துடைய ஷூட்டிங்கின் ஒரு ஷெட்யூல் சமீபத்தில் மும்பையில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X