Anika - 19 வயதுதான் ஆகுது அதுக்குள்ள இவ்வளவா?.. அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் சொத்து மதிப்பு விவரம் உள்ளே

சென்னை: Anika (அனிகா) என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

கேரளாவில் கடந்த 2004ஆம் ஆண்டு பிறந்தவர் அனிகா சுரேந்திரன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் 2007ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு அங்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. தனது திறமையால் தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

Here is the details about Anikas Net Worth

என்னை அறிந்தால்: அந்த வகையில் தமிழில் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அறிமுகமானவர் அனிகா. அதனையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது. குறிப்பாக க்ளைமேக்ஸில் அவருக்கும், அஜித்துக்குமான காட்சி பலரையும் கலங்க வைத்தது.

ஹீரோயின்: தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா புட்டபொம்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனையடுத்து மலையாளத்திலும் ஹீரோயினாக களமிறங்கிய அவர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் நடித்தார். படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே அனிகா ஓவர் கவர்ச்சி காட்டியிருக்கிறார் என கூறப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகளா இது என வாயை பிளந்தனர்.

கவர்ச்சி காட்டினாலும் படத்தின் கதையில் பல சிக்கல்கள் இருந்ததன் காரணமாக ஓ மை டார்லிங் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதனையடுத்து அவர் தற்போது மலையாளத்தில் மாலு என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். மலையாளத்தில் முதல் படம் சொதப்பியதால் நிச்சயம் இந்தப் படத்தின் மூலம் தனக்கான இடத்தை நிலைப்படுத்திட வேண்டுமென்ற கணக்கில் இருக்கிறார் அவர்.

தனுஷ் 50: தெலுங்கு, மலையாளத்தில் ஹீரோயினாக வலம் வந்தாலும் தமிழிலும் எப்படியாவது ஹீரோயினாக வலம் வர வேண்டும் என்ற ஆசையிலும் அவர் இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தமிழில் பி.டி சார், தனுஷின் 50ஆவது படம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த சூழலில் அனிகாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.

சொத்து மதிப்பு: அதன்படி 19 வயதே ஆகும் அனிகா சுரேந்திரன் தற்போது ஒரு ஆண்டுக்கு இரண்டு கோடி முதல் மூன்று கோடி ரூபாய்வரை வருமானமாக பெறுகிறாராம். அதுமட்டுமின்றி சொகுசான வீடு, கார் போன்றவற்றோடு சேர்த்து அனிகா சுரேந்தரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய்வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் 19 வயதிலேயே இவ்வளவு சொத்தா என ஆச்சரியப்பட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X