Atlee Salary - ஜவான் படத்துக்காக அட்லீ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. முதல் படத்துக்கே இவ்வளவா?
சென்னை: Atlee Salary in Jawan (ஜவானில் அட்லீ சம்பளம்) ஷாருக்கானை வைத்து இயக்கியிருக்கும் ஜவான் படத்துக்கு அட்லீ வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அட்லீ இதுவரை தமிழில் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். இதனையடுத்து தனது ஐந்தாவது படத்தை பாலிவுட்டில் இயக்குகிறார். ஷாருக்கான், நயன் தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் ஜவான் உருவாகியிருக்கிறது. பாலிவுட்டில் முதன்முறையாக என்ட்ரி கொடுக்கும் அட்லீ இந்தப் படத்தின் மூலம் மாஸ் எண்ட்ரி கொடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்: யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சென்னையில் நடந்தது. இதில் ஷாருக்கான் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். குறிப்பாக ஷாருக்கான் அனிருத்துடன் இணைந்து மேடையில் நடனமாடியது ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. மேலும் சென்னையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டை நடத்தியதன் மூலம் தமிழ்நாடு ரசிகர்களின் கவனத்தை ஜவான் படத்தின் மீது திருப்பியிருக்கிறது.
ப்ரீ புக்கிங்: படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றன. சூழல் இப்படி படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கி படுஜோராக நடந்துவருகிறது. படக்குழு நினைத்தது மாதிரியே தமிழ்நாட்டிலும் ஜவான் டிக்கெட்டுகள் வேகமாக புக் செய்யப்பட்டு வருகிறதென்று கூறப்படுகிறது.
முதல் விமர்சனம்: ஜவான் படத்தின் முதல் விமர்சனம் இன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, படத்தில் காமெடி, ஆக்ஷன், த்ரில் என அனைத்தும் கலந்து சிறப்பாக இருப்பதாகவும்; ஒளிப்பதிவு அபாரம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அட்லீயின் மேக்கிங் சீட்டின் நுனியில் அமரவைத்திருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாலிவுட்டில் அட்லீ ஒரு ஹிட்டுக்கு தயாராகிவிட்டார் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

அட்லீ சம்பளம்: இந்நிலையில் ஜவான் படத்துக்காக அட்லீ வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் 32 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய அளவில் அதிகம் சம்பளம் பெறும் இயக்குநர்களில் டாப் 10 வரிசையில் அட்லீ இடம் பிடித்திருக்கிறார் எனவும் கருதப்படுகிறது. அதேசமயம் பாலிவுட்டில் முதல் படத்தின் எண்ட்ரியிலேயே அட்லீக்கு இவ்வளவு சம்பளமா என்று திரைத்துறையினர் வாயை பிளந்திருக்கின்றனர்.
அடுத்த படம்: இதற்கிடையே அட்லீ மீண்டும் ஹிந்தி படத்தை இயக்கவிருக்கிறார் என கடந்த சில மாதங்களாக தகவல் ஓடுகிறது. அதன்படி தெறி படத்தை அங்கு அவர் ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் ஹீரோவாக வருண் தவான் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆகமொத்தம் ஹிந்தியில் அட்லீ ஒரு ரவுண்டு வருவது ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











