Big Boss Tamil 7 - பிக்பாஸ் 7ல் கலந்துகொள்ளும் யுகேந்திரன்?.. யார் இவர்?.. இதோ முழு விவரம்
சென்னை: Yugendran (யுகேந்திரன்) பிக்பாஸ் ஏழாவது சீசனில் பாடகரும் நடிகருமான யுகேந்திரன் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் ஏழாவது சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கிறது. இதுவரை ஒரு வீட்டில் நடந்துவந்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடுகளில் நடைபெறவிருக்கிறது. ஒரு வீடுனாலே கண்ட்டெண்ட்டுக்கு பஞ்சம் இருக்காது தற்போது இரண்டு வீடுகளில் நடைபெறவிருப்பதால் பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்துக்கு பஞ்சமே இருக்காது என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

போட்டியாளர்கள் லிஸ்ட்: இந்த சீசனில் யார் யார் கலந்துகொள்ளபோகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உச்சக்கட்டமாகவே இருந்தது. அதற்கு காரணம் எப்போதும் இல்லாத அளவு கடந்த சீசனில் அதிகளவு பஞ்சாயத்துக்கள் எழுந்தன. எனவே அதே ஸ்டைலில் இந்த சீசனையும் கொண்டு செல்ல சேனல் நிர்வாகம் முடிவெடுத்திருப்பதால் போட்டியாளர்களை தேடி தேடி செலக்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி பப்லு, கூல் சுரேஷ், பாடகர் யுகேந்திரன், வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா, சீரியல் நடிகை ரவீனா, விஜே அர்ச்சனா, நடனக் கலைஞர் விஜய் வர்மா, ரியாஸ்கான் மனைவி நடிகை உமா ரியாஸ், சுழல் வெப்சீரிஸ் நடிகர் ஜான்சன், காமெடி நடிகர் பாலசரவணன் உள்ளிட்ட 20 பேர் ஃபைனல் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. முதலில் வெளியான லிஸ்ட்டில் அப்பாஸ், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் இருந்தனர். ஆனால் கடைசியில் அவர்கள் விலகிவிட்டதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

யுகேந்திரன்: தற்போது வெளியாகியிருக்கும் லிஸ்ட்டில் கவனிக்கும்படியாக இருப்பவர்களில் ஒருவர் யுகேந்திரன். இவர் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் எக்கச்சக்க பாடல்களை பாடியிருக்கும் இவர் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதேபோல் விஜய் நடித்த யூத் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்திய பேட்டி: மலேசியா வாசுதேவன் மறைந்த பிறகு நியூசிலாந்தில் செட்டிலாகிவிட்டார் யுகேந்திரன். தமிழ் சினிமாவில் நடிப்பதையோ பாடுவதையோ சுத்தமாகவே நிறுத்திவிட்டார். வெளிநாட்டில் செட்டில் ஆன அவர் அங்கு ரம்புட்டான் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி உலகம் முழுவதும் இசை கான்செர்ட்டுகளை நடத்தி வருகிறார்.
சில வருடங்கள் தமிழ்நாட்டில் தலை காட்டாத யுகேந்திரன் கடந்த சில மாதங்களாகவே பல பேட்டிகளை கொடுத்துவந்தார். மேலும் வெங்கட் பிரபுவுடன் நெருக்கமாக இருக்கும் அவருக்கு மாநாடு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. யுகேந்திரன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் அவர் என்ன மாதிரி விளையாடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக இவரது தந்தை சினிமாவில் மிகப்பெரிய ஆளுமை என்பதால் ஹவுஸ் மேட்ஸ் இவரிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











