Bigg Boss Poornima - அம்மாவான பிக்பாஸ் பூர்ணிமா.. ரசிகர்கள் ஆச்சரியம்.. முழு விவரம் உள்ளே
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் பூர்ணிமா விளையாடிவருகிறார். அவர் ஏற்கனவே நயன் தாராவின் அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் செவப்பி படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறது. ராஜா என்பவர் இயக்கும் செவப்பி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. ஏறத்தாழ 50 நாட்களை கடந்திருக்கும் நிகழ்ச்சியில் நாளொரு பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கிறது. பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட், தானாக வெளியேறிய பவா செல்லதுரை போக ஜோவிகா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, கானா பாலா, ஐஷு , விக்ரமன், கூல் சுரேஷ், நிக்சன், சரவண விக்ரமன் உள்ளிட்டோர் எவிக்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

பூர்ணிமா, மாயா: இந்த சீசனின் ஹைலைட்டாக இருப்பது என்றால் அது மாயாவும், பூர்ணிமாவும்தான். கேப்டன்சியை பூர்ணிமா ஒழுங்காக செய்தார் என்ற பெயர் எடுத்தாலும் மாயாவின் கேப்டன்சி கீழ் அவரும் மாயாவும் எல்லை மீறி சென்றுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக விசித்திராவிடம் பூர்ணிமா உங்கள் மூளை கீழே கிடக்கிறது எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதெல்லாம் கடுமையான கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது. அதேபோல் நிக்சனுடன் அவர் நடனம் ஆடியது ஒருபுறம் ரசிக்கப்பட்டாலும்; அக்கா - தம்பி என்று சொல்லிக்கொண்டு இதுபோன்று செய்வது தேவையா என்றும் கேள்வி எழுப்பினர்.
இன்னும் நீடிக்கிறார்: பூர்ணிமாவின் அந்த செயல்பாடை எல்லாம் பார்த்தபோது கண்டிப்பாக அவர் விரைவிலேயே வீட்டிலிருந்து வெளியேறிவிடுவாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறார். அநேகமாக இறுதி 5 பேருக்குள் பூர்ணிமா வருவாரோ என்று ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் அவரது தாய் உள்ளே வந்தும் நன்றாகவே தைரியம் கொடுத்துவிட்டு சென்றார்.
பூர்ணிமா நடிக்கும் படம்: இதற்கிடையே அராத்தி என்ற யூட்யூப் சேனல் மூலம் பிரபலமான அவருக்கு நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசை. பிக்பாஸ் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தை பயன்படுத்த நினைத்துதான் அவர் வீட்டுக்குள் வந்தார். அதேசமயம் வீட்டுக்குள் வருவதற்கு முன்னதாகவே நயன் தாரா நடித்த அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
செவப்பி: இந்த சூழலில் அவர் செவப்பி என்ற படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். படத்துக்கு செவப்பி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படமானது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. எம்.எஸ்.ராஜா என்பவர் படத்தை இயக்குகிறார்.படமானது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் பூர்ணிமாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூர்ணிமா ரோல்: இந்நிலையில் செவப்பி படத்தில் அவர் ஏற்றிருக்கும் ரோல் குறித்து தெரியவந்திருக்கிறது. அதன்படி படத்தில் அவர் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார். அதுதொடர்பான போஸ்டரும் வெளியாகியிருக்கிறது. போஸ்டரை பார்த்த ரசிகர்கள், பொதுவாக சினிமாவில் வளரும்போது எந்த ஹீரோயினும் அம்மா ரோலில் நடிக்க கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் பூர்ணிமா தைரியமாக அந்த முடிவை எடுத்திருக்கிறார். கண்டிப்பாக அவருக்கு சினிமாவில் சிறந்த எதிர்காலம் இருக்கும் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











